நிதி அமைச்சகம்

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 10 பி / 10 பிபி மற்றும் படிவம் ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

Posted On: 18 SEP 2023 8:19PM by PIB Chennai

2022-23 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10 பி / படிவம் 10 பிபியில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2023 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இப்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கையை ஐடிஆர்-7 படிவத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2023-ல் இருந்து 30.11.2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

225/177/2023/ITA-II-ல் 16/2023-ஆம் எண் கொண்ட சிபிடிடி சுற்றறிக்கை இன்று (18.09.2023) வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கை www.incometaxindia.gov.in  என்ற இணையதளத்தில் உள்ளது.

 

Release ID: 1958632

****  

SM/ANU/PLM/KRS



(Release ID: 1958657) Visitor Counter : 153