சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பெங்களூரில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
18 SEP 2023 5:05PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), பெங்களூருவில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாட்டில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை (மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ - எம்.எம்.எல்.பி) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அரசின் சிறப்புத் திட்டங்கள் அமைப்பு (எஸ்பிவி), பெங்களூரு எம்எம்எல்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் கன்செஸ்ஸனர் எஸ்பிவி மெஸர்ஸ் பாத் பெங்களூரு லாஜிஸ்டிக்ஸ் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள முதலலிங்கனஹள்ளியில் 400 ஏக்கர் பரப்பளவில் எம்.எம்.எல்.பி உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்படும் முதல் மற்றும் மிகப்பெரிய எம்.எம்.எல்.பி.யாக இந்த திட்டம் அமையும்.
இது தேசிய நெடுஞ்சாலை 648, டபாஸ்பேட்டை முதல் ஓசூர் வரை மற்றும் வடக்கில் சாட்டிலைட் டவுன் ரிங் சாலை மற்றும் தெற்கில் பெங்களூரு - ஹூப்ளி - மும்பை ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது. பெங்களூரு எம்.எம்.எல்.பி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரு நகர ரயில் நிலையத்திலிருந்து 48 கிலோ மீ்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
எம்.எம்.எல்.பி மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.எல்.பி 45 ஆண்டு காலம் முடிவதற்குள் சுமார் 30 மில்லியன் மெட்ரிக் டன் (எம்.எம்.டி) சரக்குகளை கையாளும். அத்துடன் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற நீர்ப்பிடிப்பு பிராந்தியத்தில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்) மற்றும் கர்நாடகா தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (கே.ஐ.ஏ.டி.பி) ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அரசு சிறப்புத் திட்ட அமைப்பு (எஸ்.பி.வி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் முக்கிய முன்முயற்சியாக எம்.எம்.எல்.பி. எனப்படும் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைந்துள்ளது.
----
(Release ID: 1958506)
ANU/SM/PLM/KRS
(Release ID: 1958643)
Visitor Counter : 131