ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை எதிர்வரும் தூய்மை இயக்கம் 3.0 இல் பங்கேற்கிறது
Posted On:
18 SEP 2023 3:42PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங்கின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை எதிர்வரும் தூய்மை இயக்கம் 3.0-ல் பங்கேற்க தயாராகி வருகிறது. துாய்மையை பராமரித்தல் மற்றும் அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களை குறைத்தல் ஆகிய இலக்குகளை அடைவதற்காக, 2023 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2023 வரை சிறப்பு இயக்கம் 3.0 ஐ செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மேற்கூறிய பிரச்சாரம் 3.0 மற்றும் செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கும் இயக்கத்தின் ஆயத்த கட்டத்தில் பங்கேற்கிறது.
1. ஊரக வளர்ச்சித் துறை, அதன் தலைமைச் செயலகத்திலும், அதன்
2. நிர்வாக அதிகாரத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அலுவலகத்திலும், நிலுவையில் உள்ள குறிப்புகளைத் தீர்ப்பதற்கும், தூய்மையை ஊக்குவிப்பதற்கும் 2022 அக்டோபர் 2 முதல் 31 அக்டோபர் 2022 வரை சிறப்பு இயக்கம் 2.0 -ல் பங்கேற்றது. சிறப்பு இயக்கத்தின் செயலாக்க கட்டத்தில் விஐபி குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனை குறிப்புகள், மாநில அரசு குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் திறம்பட கையாளப்பட்டன. அடையாளம் காணப்பட்ட கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
2022- டிசம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு இயக்கம் 2.0-வில் பின்வரும் நிலுவையில் இருந்த விவகாரங்களுக்கு தீர்வுக் காணப்பட்டது.
எம்பி மேற்கோள்கள் – 155
பொதுமக்கள் குறைகள் - 13,313
மக்கள் குறைகேட்பு மனு - 3,112
விடுவிக்கப்பட்ட இடம் - 2,242 சதுர அடி.
ஈட்டிய வருவாய் - ₹ 17,04,828
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1958574)
Visitor Counter : 241