வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் குறித்து வட மண்டல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது
Posted On:
15 SEP 2023 2:38PM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையே பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் (என்.எம்.பி) குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வாராந்திர கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த கூட்டங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
அதன்படி வடபகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், டிபிஐஐடி-யின் சரக்கு போக்குவரத்து பிரிவு சிறப்பு செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நேற்று (14.09.2023) காணொலி மூலம் நடைபெற்றது. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக், ஹரியானா, டெல்லி, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தின் போது பேசிய சிறப்பு செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, உள்கட்டமைப்பு மற்றும் சரக்குப்போக்குவரத்துத் துறைகளில் உள்ள இடைவெளிகளை அடையாளம் கண்டு பலம், பலவீனங்கள், வாய்ப்புகள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார். மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக பெரும்பாலான வட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் சவாலை எதிர்கொண்டு திட்டங்களைத் தீட்ட பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
***
SM/ANU/PLM/RS/GK
(Release ID: 1957706)
Visitor Counter : 118