இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
3.0 சிறப்பு இயக்கத்தின் போது விளையாட்டுத் துறை கள / வெளிப்பகுதி அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தவுள்ளது
Posted On:
15 SEP 2023 1:34PM by PIB Chennai
2022 அக்டோபரில் நடைபெற்ற சிறப்பு இயக்கம் 2.0 தொடர்ச்சியின் ஒரு பகுதியாக, விளையாட்டுத் துறை அதன் கீழ் உள்ள அமைப்புகளான இந்திய விளையாட்டு ஆணையம், லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம், தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை, தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் ஆகியவை தூய்மை மற்றும் நிலுவைப்பணிகளைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தத் துறையின் சிறப்பு இயக்கம் 2.0 2022 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. சிறப்பு இயக்கம் 2.0-ஐ செயல்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 133 இடங்களை இத்துறை அடையாளம் கண்டது. இந்த இயக்கத்தின் போது, மாநில அரசு, பிரதமர் அலுவலக குறிப்புகளுக்கு 100% தீர்வு காணப்பட்டது.
விளையாட்டுத் துறை மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகள் 2.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 3.0 இல் பங்கேற்கும். 3.0 இந்த இயக்கத்தின் போது விளையாட்டுத் துறை கள / வெளிப்பகுதி அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1957624
***
ANU/SM/SMB/AG/GK
(Release ID: 1957701)