சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா செப்டம்பர் 16 அன்று ஆக்ராவில் உள்ள ஜிஐசி மைதானத்தில் நடைபெறவுள்ள உறுப்பு தான உறுதிமொழிக்கு தலைமை தாங்குகிறார்

Posted On: 14 SEP 2023 1:52PM by PIB Chennai

மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் முன்னிலையில்செப்டம்பர் 16அன்று ஆக்ராவில் உள்ள ஜி.ஐ.சி மைதானத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழியை வழிநடத்துகிறார். ஆக்ராவில் சுமார் 10,000 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் உயர் சிறப்பு மருத்துவ பிரிவை டாக்டர் மாண்டவியா திறந்து வைக்கிறார். உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான பதிவேட்டை அவர் அறிமுகம் செய்கிறார். இதில் பதிவு செய்ய, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மட்டுமே தேவை. அதே நாளில் ஆக்ராவில் 23 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் 87 வட்டார பொது சுகாதார அலகுகளுக்கும் டாக்டர் மாண்டவியா அடிக்கல் நாட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2023 வரை அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான 'இரு வார சேவை ' நடைபெறும்.  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவால் செப்டம்பர் 13 அன்று தொடங்கி வைக்கப்பட்ட 'ஆயுஷ்மான் பவ' பிரச்சாரம், நாடு முழுவதும் சுகாதார அணுகல் மற்றும் உள்ளடக்கத்தை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டது. இருவார சேவையின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், புவியியல் தடைகளைத் தாண்டி, யாரும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ்மான் மேளாக்கள்: ஆயுஷ்மான் பாரத்- எச்.டபிள்யூ.சி மற்றும் சி.எச்.சி.களில் நடைபெறும் இந்த மேளாக்கள் ஏ.பி.எச்.ஏ ஐடிகளை (ஹெல்த் ஐடி) உருவாக்குவதற்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை வழங்குவதற்கும் உதவும். ஆரம்பகால நோயறிதல், விரிவான ஆரம்ப சுகாதார சேவைகள், நிபுணர்களுடன் டெலி கன்சல்டேஷன் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளையும் அவர்கள் வழங்குவார்கள்.

ஆயுஷ்மான் சபாக்கள்: ஒவ்வொரு கிராமம் மற்றும் பஞ்சாயத்திலும் இந்த கூட்டங்கள் ஆயுஷ்மான் அட்டைகளை விநியோகிப்பதிலும், ஏ.பி.ஏ அடையாள அட்டைகளை உருவாக்குவதிலும், தொற்றா நோய்கள், காசநோய் (நிக்ஷய் மித்ரா), அரிவாள் செல் நோய், அத்துடன் இரத்த தானம் மற்றும் உறுப்பு தான இயக்கங்கள் போன்ற முக்கிய சுகாதார திட்டங்கள் மற்றும் நோய் நிலைமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆயுஷ்மான் பவ பிரச்சாரம் அனைத்து சுகாதார திட்டங்களின் செறிவூட்டலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எந்தவொரு ஏற்றத்தாழ்வும் அல்லது விலக்கும் இல்லாமல் ஒவ்வொரு தனிநபரும் அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு பொதுவான பணியின் கீழ் இது அரசாங்கத் துறைகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகங்களை ஒருங்கிணைக்கிறது.

தன்னார்வ ரத்த தானம் இணைப்பு: https://www.eraktkosh.in/BLDAHIMS/bloodbank/transactions/bbpublicindex.html

 

உடல் உறுப்பு தானம் இணைப்பு: http://www.notto.abdm.gov.in/ 

***


(Release ID: 1957453) Visitor Counter : 288