பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் சிறப்பு இயக்கம் 3.0 போர்ட்டலை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 14.09.2023 அன்று தொடங்கி வைப்பார்.
Posted On:
13 SEP 2023 7:24PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் சிறப்பு இயக்கம் 3.0-ஐக் கண்காணிக்க https://scdpm.nic.in என்ற சிறப்பு வலைப் பக்கத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் செப்டம்பர் 14, 2023 அன்று தொடங்கி வைப்பார். தொடக்க விழாவில் சிறப்பு இயக்கம் 3.0 இன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மத்திய அரசின் 84 அமைச்சகங்கள் / துறைகளில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.சிறப்பு இயக்கம் 3.0 க்கு முன்னதாக 2023 செப்டம்பர்15 முதல் செப்டம்பர் 30 வரை ஆயத்தக் கட்டம் இருக்கும்.
இதே கூட்டத்தில், டிசம்பர் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான சிறப்பு இயக்க முன்னேற்றம், 2023 ஜூன்-ஜூலை மாதத்திற்கான செயலக சீர்திருத்தங்களின் மாதாந்திர அறிக்கை மற்றும் சிறப்பு இயக்கம் 3.0 ன் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.
மத்திய அரசு 2023 அக்டோபர் 2 முதல்2023 அக்டோபர் 31 வரை தூய்மை, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 3.0 என்ற சிறப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. 2023, ஆகஸ்ட் 25 அன்று மத்திய அரசு செயலாளர்கள் அனைவருடனும் அமைச்சரவை செயலாளர் உரையாற்றினார். சிறப்பு இயக்கம் 3.0 அமைச்சகங்கள்/ துறைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட/ சார்நிலை அலுவலகங்களுடன் சேவை வழங்கலுக்குப் பொறுப்பான அலுவலகங்களில் கவனம் செலுத்தும். நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறை சிறப்பு இயக்கம் 3.0ஐ செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புத் துறையாகும்.
சிறப்பு இயக்கம் 3.0 இன் ஆயத்தப் பகுதி சிறப்பு இயக்கம் 3.0 போர்ட்டல் தொடக்கத்துடன் தொடங்கி 2023, செப்டம்பர் 30 வரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அமைச்சகங்கள்/ துறைகள் தெரிவு செய்யப்பட்ட பிரிவுகளில் நிலுவையிலுள்ள இடங்களை அடையாளம் கண்டு இயக்கத்திற்கான இடங்களை இறுதி செய்யும்.
********
(Release ID: 1957111)
SM/SMB/KRS
(Release ID: 1957176)
Visitor Counter : 131