மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

செமிகான் இந்தியா 2023 இன் வெற்றியைத் தொடர்ந்து, 2024 செப்டம்பரில் நடைபெறும் செமிகான் இந்தியாவை தொடங்கி வைக்க இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை பெங்களூரு வருகிறார்.

Posted On: 12 SEP 2023 6:20PM by PIB Chennai

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குஜராத்தில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2023 இன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, உலகளாவிய உச்சி மாநாடு 2024 செப்டம்பரில் மீண்டும் தொடங்க உள்ளது. செமிகான் இந்தியா 2024-க்கான முன்னோட்ட  நிகழ்வு செப்டம்பர் 13, 2023 அன்று பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், எலக்ட்ரானிக்கா & புரொடக்ஷன்காவுடன் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள இந்த முதன்மை நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.

"இந்தியா - நம்பகமான கூட்டாளி மற்றும் உலகளாவிய மின்னணுத் துறையில் வளர்ந்து வரும் சக்தி" என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருளாகும். இது தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை ஒன்றிணைத்து செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையை மேம்படுத்த உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைத்து செமிகான் இந்தியா நாட்டில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாக மாறியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வின் போது, உலகளாவிய மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்துவார். குறிப்பாக இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் சமீபத்திய வரலாற்று சிறப்புமிக்க புது தில்லி பிரகடனத்தைத் தொடர்ந்து, இந்தியா எவ்வாறு வளர்ந்து வரும் வேகத்தை அனுபவித்து வருகிறது என்பதை அவர் எடுத்துக்காட்டுவார்.

செமிகான் இந்தியா 2023 பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து இந்தியா செமிகண்டக்டர் மிஷன் ஏற்பாடு செய்தது.

இந்தியா செமிகண்டக்டர் மிஷனின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிறுவுவதே இதன் குறிக்கோள். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ள ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க பங்கேற்பை ஈர்த்தது.

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1956686

*** 

AD/PKV/KRS



(Release ID: 1956766) Visitor Counter : 124