நிதி அமைச்சகம்
இந்தியா-இங்கிலாந்து இடையே 12-வது பொருளாதார மற்றும் நிதி உரையாடல் (ஈ.எஃப்.டி) புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
11 SEP 2023 8:24PM by PIB Chennai
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 12-வது சுற்று பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்திய தூதுக்குழுவும், பிரிட்டன் கருவூலத் தலைவர் ஜெரமி ஹன்ட் எம்.பி தலைமையிலான பிரிட்டன் தூதுக்குழுவும் இதில் கலந்து கொண்டது.
இந்தியாவும் இங்கிலாந்தும் நிதிச் சேவைகளில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின. நிதி உள்ளடக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பரஸ்பர விருப்பங்களை ஆதரிக்கின்றன. கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி.யில் நிதி சேவைகள் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதை ஆதரிப்பதற்கான இங்கிலாந்தின் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கை இருந்தது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டு முன்னுரிமைகள், வலுவான ஃபின்டெக் கூட்டாண்மை மற்றும் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை நோக்கி நிலையான நிதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை மேம்படுத்துவது குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
உலகப் பொருளாதாரம் மற்றும் பலதரப்பு விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு திட்டத்துக்கு ஆதரவாக நிபுணத்துவம் மற்றும் முதலீட்டை பயன்படுத்துவதற்கான கூட்டு முயற்சியான இந்தியா-இங்கிலாந்து உள்கட்டமைப்பு நிதி இணைப்பை இரு நாடுகளும் அறிவித்தன.
மத்திய நிதி அமைச்சரும், பிரிட்டன் நிதியமைச்சரும் கூட்டாக வெளியிட்ட கூட்டறிக்கையை ஏற்றுக்கொண்டதன் மூலம் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இங்கிலாந்து கருவூலம், பாங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் நிதி நடத்தை ஆணையத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் போது, திரு உதய் கோடக் மற்றும் திரு பில் வின்டர்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தியா-இங்கிலாந்து நிதி கூட்டாண்மை (ஐ.யூ.கே.எஃப்.பி) கூட்டத்திலும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முக்கிய வர்த்தகத் தலைவர்கள் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். ஐ.யு.கே.எஃப்.பி கூட்டத்தில் கொள்கை ஆவணங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நிதி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
***
AD/PKV/KRS
(रिलीज़ आईडी: 1956489)
आगंतुक पटल : 241