அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிறப்பு முகாம் 3.0 – உயிரி தொழில்நுட்பத் துறை

Posted On: 11 SEP 2023 4:37PM by PIB Chennai

நிலுவையில் உள்ள பணிகளை தீர்ப்பதற்கான சிறப்பு முகாம் 2.0 மூலம் உயிரித் தொழில்நுட்பத்துறை டிசம்பர், 2022 முதல் ஜூலை, 2023 வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் (65%) நாடாளுமன்ற உத்தரவாதங்கள் (85%), பிரதமர் அலுவலக குறிப்புகள் (90%), .எம்.சி குறிப்புகள் (100%), பொதுமக்கள் குறைகள் (88%) உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிலுவையில் பணிகளைக் குறைத்தது.

இக்காலகட்டத்தில் குறிப்பாக பின்வருவனவற்றைப் பொறுத்தவரை சிறந்த நடைமுறைகளை அது பின்பற்றியுள்ளது:-

1.         அறிவியல் அமைச்சகங்கள் / துறைகளில் அனைத்து உயிரியல் ஆராய்ச்சி ஒழுங்குமுறை ஒப்புதலுக்கான ஒற்றை சாளர தளமான உயிரியல் ஆராய்ச்சி ஒழுங்குமுறை ஒப்புதல் இணையதளம் தொடங்குதல்.

2.         துறையில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் தொடர்பான தாமதத்தை உறுதி செய்தல்.

3.         மின்-அலுவலக பதிப்பு 7.0 க்கு இடம்பெயர்தல்

4.         இத்துறையில் 100% மின்னணு ரசீதுகள் மற்றும் மின் கோப்புகளை உறுதி செய்ய முயற்சி செய்தல்

-----


ANU/AD/IR/KPG/KRS


(Release ID: 1956436)