நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேவையற்ற தகவல்களை தடுப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

प्रविष्टि तिथि: 07 SEP 2023 11:16AM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, தேவையற்ற தகவல்களை தடுப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியுள்ளது. வரைவு வழிகாட்டுதல்கள் நுகர்வோர் விவகாரத் துறையின் வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளன https://consumeraffairs.nic.in என்ற இணையதளம் மூலம் இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இ-காமர்ஸ் தளங்கள், தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் (வி.சி.ஓக்கள்) உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு தேவையற்ற தகவல்களை தடுப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வரைவு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகாரத் துறை 2023, ஜூன்  13 அன்று "தேவையற்ற தகவல்கள்" குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தியது, இதில் இந்திய விளம்பர தர கவுன்சில் பல்வேறு இ-காமர்ஸ் தளங்கள், தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் போன்றவை கலந்து கொண்டன. கூட்டத்தில், தேவையற்ற தகவல்கள் கவலைக்குரியது என்றும் இதுகுறித்து முன்கூட்டியே கையாளப்பட வேண்டும் என்று பொதுவான ஒருமித்த கருத்து இருந்தது.

பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கருத்துக்களை 2023, அக்டோபர் 5 ஆம் தேதி வரை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

****

ANU/AD/IR/KV/KPG


(रिलीज़ आईडी: 1955409) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu