ஆயுஷ்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆயுர்வித்யா, சுப்ரஜா, வயோமித்ரா ஆகியவற்றில் ஆயுஷ் திட்டங்களை வலுப்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சர் அழைப்பு

Posted On: 06 SEP 2023 12:56PM by PIB Chennai

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் பாதைகள்  துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய ஆயுஷ் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு தினேஷ் குண்டுராவ், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா, ஆந்திரா, தெங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம், லட்சத்தீவு யூனியன் பிரதேசம் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பங்கேற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆயுஷின் நிலை மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னணி ஆயுஷ் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவான விளக்கக்காட்சிகளை வழங்கினர்.

 

விழாவில் பேசிய திரு சர்பானந்தா சோனோவால், "நமது வளமான பாரம்பரியம் மற்றும் பழங்கால மருத்துவ முறையின் திறன் மனிதகுலத்தின் தலைமுறைகளில் ஒரு சிறந்த, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான காலத்தின் கட்டாயமாகும் என்று கூறினார். ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், சோவா ரிக்பா அல்லது ஹோமியோபதி என இந்த மருத்துவ முறைகளை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன மருத்துவத்துடன் விஞ்ஞான ரீதியாக ஒருங்கிணைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

 

ஆயுஷ் மருத்துவ முறையின் பயனை எடுத்துரைத்த அமைச்சர், "பள்ளி மாணவர்களுக்கு ஆயுஷ் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த ஆயுர்வித்யா போன்ற சில வலுவான திட்டங்களை ஆயுஷ் கொண்டுள்ளது என்றும்  சுப்ரஜா, தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆயுஷ் என்றும் வயோமித்ரா என்பது ஆயுஷ் அடிப்படையிலான முதியோர் திட்டமாகும் என்றும் கூறினார்.

 

*****


(Release ID:1955068)

 

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 1955264) Visitor Counter : 163