பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படை மற்றும் ட்ரோன் கூட்டமைப்பு இணைந்து பாரத் ட்ரோன் சக்தி 2023 ஐ நடத்துகிறது

Posted On: 06 SEP 2023 2:26PM by PIB Chennai

ட்ரோன் தொழில்நுட்பம், செயல்திறனை அதிகரிப்பதன் மூலமும், அபாயத்தைக் குறைப்பதன் மூலமும், திறனை மேம்படுத்துவதன் மூலமும் சிவில் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது - இராணுவத்திலும், சிவில் களத்திலும். உளவு கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை தொலைவிலிருந்து இயக்கப்படும் விமானங்களை பரவலாகப் பயன்படுத்துகிறது. மெஹர் பாபா திரள் ட்ரோன் போட்டி போன்ற முன்னெடுப்புகளால் இந்தியாவில் ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு திறன் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் அடுத்தகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த ஆளில்லா தளங்களைப் பயன்படுத்துவதில் அதன் வளமான அனுபவத்தைப் பயன்படுத்த, இந்திய விமானப்படை இந்திய ட்ரோன் கூட்டமைப்புடன் இணைந்து 'பாரத் ட்ரோன் சக்தி 2023' ஐ நடத்துகிறது. 2023 செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்வு ஹிண்டனில் (காசியாபாத்) உள்ள இந்திய விமானப்படையின் விமானப்படை தளத்தில் நடத்தப்படும். அங்கு இந்திய ட்ரோன் தொழில் நேரடி வான்வழி செயல்விளக்கங்கள் அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு, மாநிலங்களின், பொது மற்றும் தனியார் தொழில்கள், ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் ட்ரோன் ஆர்வலர்கள் உட்பட சுமார் 5,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக, 'பாரத் ட்ரோன் சக்தி 2023' நிகழ்ச்சி 2030-க்குள் உலகளாவிய ட்ரோன் மையமாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1955079

 

***

ANU/AD/IR/KPG/GK



(Release ID: 1955157) Visitor Counter : 138