நிலக்கரி அமைச்சகம்
அனல் மின் நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளது: நிலக்கரி அமைச்சகம் உறுதி
Posted On:
05 SEP 2023 6:19PM by PIB Chennai
நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு நிலக்கரி இருப்பை நிலக்கரி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு அனல் மின் உற்பத்தி, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 485.42 பில்லியன் யூனிட் (பியூ) உடன் ஒப்பிடும்போது (ஏப்ரல்-ஆகஸ்ட் 2023) 6.58% அதிகரித்து 517.34 பியூ -ஐ எட்டியது.
மின்சாரத் துறைக்கு நிலக்கரி அனுப்புவதைப் பொறுத்தவரை, ஏப்ரல் 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை 2023-24 நிதியாண்டின் ஒட்டுமொத்த சாதனை 324.50 மில்லியன் டன்னாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தின் 306.70 மில்லியன் டன் என்பதுடன் ஒப்பிடும்போது 5.80% வளர்ச்சியாக உள்ளது.
31.08.23 நிலவரப்படி, சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், போன்றவற்றில் 31.08.2022-ல் 68.76 மில்லியன் டன் என்பதுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த நிலக்கரி இருப்பு நிலை, 25.08% அதிகரிப்புடன் 86.00 மில்லியன் டன்னை எட்டியது. கூடுதலாக, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்தின் நிலக்கரி கையிருப்பு 31.08.23 நிலவரப்படி 45.33 மில்லியன் டன்னாக உள்ளது, இது 31.08.22 அன்று 31.12 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்புடன் ஒப்பிடும்போது 45.66% என்ற வளர்ச்சியைக் காட்டுகிறது.
இதன் மூலம் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவதில் நிலக்கரி அமைச்சகம் உறுதியாக உள்ளது. இது தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுக்கிறது.
****
(Release ID: 1954906)
ANU/AD/SMB/KPG/KRS
(Release ID: 1954942)
Visitor Counter : 130