அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒளியியல் செயலில் உள்ள நெகிழ்வான மட்கும் தன்மையுள்ள பாலிமர்-நானோ காம்போசிட் ஃபிலிம்களை விஞ்ஞானிகள் உருவாக்கினர்

Posted On: 05 SEP 2023 11:10AM by PIB Chennai

நெகிழ்வான காட்சி, நெகிழ்வான கரிம எல்.ஈ.டி போன்ற காட்சி ஊடகங்களில் ஒளியியல் சாதனங்களாகப் பயன்படுத்தக்கூடிய சிறந்த இயந்திர பண்புகளைக் கொண்ட ஒளியியல் ரீதியாகச் செயல்படும் எளிதாக மட்கும்  பாலிமர்- நானோ கலவை கொண்ட பிலிம்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பாலிமர்கள் நம் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. இருப்பினும், வெவ்வேறு பொறியியல் பயன்பாடுகளுக்காக மிகவும் நெகிழ்வான மற்றும் ஒளியியல் ரீதியாக செயலில் உள்ள பாலிமர்களுக்கான தேவை எழுந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பொருத்தமான நானோ பொருட்களைப் பயன்படுத்தி பாலிமரிக் பொருட்களின் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நானோ பொருட்கள் பாலிமர்களின் உள்ளார்ந்த பண்புகளை அப்படியே தக்க வைத்திருக்கும் என்றும் பாலிமர்களின் பண்புகளை மேம்படுத்தும் என்றும் அறியப்படுகிறது. பாலிவினைல் ஆல்கஹால் (பி.வி.ஏ) என்பது மிகவும் பரவலாக ஆய்வு செய்யப்பட்ட செயற்கையாக மக்கும் பாலிமர்களில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொருத்தமான நானோ பொருட்களை இணைப்பதன் மூலம் அதன் ஒளியியல் மற்றும் இயந்திரப் பண்புகளை மாற்றியமைக்க முடியும். 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) கீழ் செயல்படும் வடகிழக்கு இந்தியாவின் தன்னாட்சி நிறுவனமான குவஹாத்தியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.ஏ.எஸ்.எஸ்.டி) இயற்பியல் அறிவியல் பிரிவைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக் குழு, ஃபேசில் கரைசல் வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கும் பி.வி.ஏ-சி.யு.ஓ (PVA-CuO) நானோ கலவை கொண்ட பிலிமை உருவாக்கியது.

இந்த ஆராய்ச்சிக் குழுவுக்கு இணைப் பேராசிரியர் டாக்டர் சாரதி குண்டு மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் திரு சையத் அகிருல் அலி ஆகியோர் தலைமை தாங்கினர்.

வெளியீடு இணைப்பு: https://doi.org/10.1016/j.colsurfa.2023.131840  

***

ANU/AD/BS/GK



(Release ID: 1954863) Visitor Counter : 143


Read this release in: Urdu , English , Hindi