அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

"பசுமை கண்டுபிடிப்புகளுக்கு அதிகாரமளித்தல்: தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவைப் பெற்ற ‘ஆலோ இ-செல்’லின் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதன்மை பேட்டரிகள்

Posted On: 04 SEP 2023 3:29PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சியான 'மிஷன் லைஃப்' (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற முன்னெடுப்புக்கு  இணக்கமாக, உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆலோ-செல் பிரைவேட் லிமிடெட் உடனான ஒத்துழைப்பை அறிவிப்பதில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டி.டி.பி) பெருமிதம் கொள்கிறது. இந்த ஒத்துழைப்பு வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது. நிலையான நடைமுறைகள் மற்றும் உள்நாட்டு படைப்பாற்றலுக்கான பிரதமரின் அழைப்பை தடையின்றி பிரதிபலிக்கிறது.

'மிஷன் லைஃப்' என்ற கருத்தாக்கத்தை பிரதிபலிக்கும் புதுமையான தீர்வுகளை ஆதரிக்கும் தனது அர்ப்பணிப்பில் உறுதியோடு திகழும் டி.டி.பி, ஆலோ-செல் நிறுவனத்துக்கு தனது உதவியை வழங்குகிறது, ரூ.2.98 கோடி திட்ட மதிப்பீட்டிலான "சுற்றுச்சூழலுக்கு உகந்த -1.5 வி ஏஏ அளவு கற்றாழையை மூலப்பொருளாகக் கொண்ட  பேட்டரிகளின் வணிகமயமாக்கல்." திட்டத்துக்கு தொழில் மேம்பாட்டு வாரியம் கணிசமான பங்களிப்பான ரூ.1.91 கோடியை மென்மையான கடனாக வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தின் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்டார்ட்அப்பின் தனித்துவமான அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு உகந்த 1.5 வோல்ட் ஏஏ அளவிலான பேட்டரியை உருவாக்குவதை உள்ளடக்குகிறது. இது கனரக உலோகங்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் நிறைந்த வழக்கமான பயன்பாட்டில்  உள்ள  பேட்டரிகளை  சந்தையில் இருந்து வெளியேற உதவும். கற்றாழையின் உள்ளார்ந்த பண்புகளைப் பயன்படுத்தி,  ஆலோ-செல், நிறுவப்பட்ட சந்தை தரங்களின் செயல்திறனுடன் பொருந்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பொறுப்பையும் ஆதரிக்கும் ஒரு எலக்ட்ரோலைட்டை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனம் ராஜஸ்தானின் பூண்டியில் முதன்மை பேட்டரிகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான வசதிகளை உருவாக்கும்.

சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு இசைவாக வாழ்க்கை முறை தேர்வுகளை அறிமுகப்படுத்துதல் என்ற 'மிஷன் லைஃப்' நெறிமுறைகளுடன் இந்த திட்டம் தடையின்றி ஒத்திசைவாக இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த முதன்மை பேட்டரிகளின் காரணத்தை முன்னெடுப்பதன் மூலம், ஆலோ-செல் தூய்மையான, ஆரோக்கியமான சூழலுக்கு பங்களிக்கக்கூடும், அதே நேரத்தில் வழக்கமான பேட்டரிகளில் உள்ள நச்சு கலவையுடன் பிணைக்கப்பட்ட நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்யலாம்.

ஆலோ-செல்லின் குறிப்பிடத்தக்க பயணத்தில், ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் டிபிஐஐடியின் கீழ் ஸ்டார்ட்அப் இந்தியாவால் எரிசக்தி துறையில் தேசிய தொடக்க விருது 2020 மற்றும் ஸ்னைடர் எலக்ட்ரிக்கின் குளோபல் வின்னர்ஸ் 2019 விருது உள்ளிட்ட பாராட்டுகளை அந்த நிறுவனம் பெற்றுள்ளது.

 

இதுகுறித்து டிடீபி செயலாளர் ராஜேஷ் குமார் பதக் கூறுகையில், "

ஆலோ-செல் பிரைவேட் லிமிடெட் உடனான எங்கள் ஒத்துழைப்பு நிலையான கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதற்கான டி.டி.பி.யின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த கூட்டாண்மை தொழில்நுட்ப முன்னேற்றத்தை சுற்றுச்சூழல் நிர்வாகத்துடன் கலக்கும் தொலைநோக்கு திட்டங்களை ஆதரிப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. டி.டி.பி.யின் உறுதியான ஆதரவால் ஸ்டார்ட்அப் முன்னேறும்போது, நமது தேசத்திற்கு மிகவும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசு-தொழில்துறை ஒத்துழைப்பின் திறனை எடுத்துக்காட்டுகிறது.

***

(Release ID: 1954589)

ANU/SM/BS/KRS



(Release ID: 1954755) Visitor Counter : 97


Read this release in: English , Hindi , Urdu , Marathi