பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை தளபதிகள் மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 03 SEP 2023 12:34PM by PIB Chennai

2023 ஆம் ஆண்டுக்கான கடற்படை தளபதிகளின் இரண்டாவது மாநாடு (Naval Commanders' Conference) புதுதில்லியில் செப்டம்பர் 04-ம் தேதி முதல் 06-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு, கடற்படைத் தளபதிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் மாநாடாகும். 'ஹைபிரிட்' எனப்படும் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இரு வடிவத்திலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

இந்த மூன்று நாள் மாநாடு கடற்படைத் தலைமைத் தளபதி தலைமையில் நடைபெறும்.  முந்தைய ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாடுகள், போக்குவரத்து, தளவாடங்கள், மனிதவளம், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைள் இதில் ஆய்வு செய்யப்படும். அடுத்தடுத்த மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்த மாநாட்டின் போது கடற்படை தளபதிகள் மத்தியில் உரையாற்றுவதுடன் அவர்களுடன் கலந்துரையாடுவார். முப்படைகளின் தளபதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.. நாட்டின் முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு பாதுகாப்பான கடல்சார் சூழலை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலுக்கான வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.

2047-ம் ஆண்டுக்குள் முழுமையான தற்சார்பை அடையும் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் மூலம் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் நடைபெறும் கடற்படைத் திட்டங்களும் இந்த மாநாட்டில் ஆய்வு செய்ப்படும்.

***

SM/ANU/PLM/DL


(रिलीज़ आईडी: 1954468) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu