உள்துறை அமைச்சகம்
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா இஸ்ரோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
“நமது விஞ்ஞானிகள் தங்கள் வலிமையையும் அறிவாற்றலையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்”
“இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதில் தேசம் பெருமை கொள்கிறது-இந்த இணையற்ற சாதனைக்காக இஸ்ரோ குழுவுக்கு பாராட்டுக்கள்”
“அமிர்தகாலத்தின் போது விண்வெளித் துறையில் தற்சார்பு என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும்”
Posted On:
02 SEP 2023 2:04PM by PIB Chennai
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது விஞ்ஞானிகள் தங்கள் வலிமையையும் அறிவாற்றலையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் தேசம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளது. இணையற்ற இந்த சாதனைக்காக இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள்.
அம்ரித் காலத்தின் போது, விண்வெளித் துறையில் தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான மிகப்பெரிய முன்னேற்றம் இது”
இவ்வாறு திரு அமித்ஷா கூறியுள்ளார்.
***
SM/ANU/PLM/DL
(Release ID: 1954329)
Visitor Counter : 164