ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பருத்தி மதிப்புத் தொடருக்கான முன்முயற்சிகளை ஆய்வு செய்வதற்காக கோயம்புத்தூரில் ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் ஏழாவது கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

Posted On: 31 AUG 2023 8:21PM by PIB Chennai

மத்திய தொழில், வணிகம், ஜவுளி, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், 2023 ஆகஸ்ட்31 அன்று பருத்தி குறித்த ஜவுளி ஆலோசனைக் குழுவின் (டிஏஜி) ஏழாவது கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

 

ஜவுளி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திருமதி தர்ஷனா வி.ஜர்தோஷ், ஜவுளித் துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா, டிஏஜி தலைவர் திரு சுரேஷ் கோடக் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களைச் சேர்ந்த  மூத்த அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னணி சங்கங்கள் மற்றும் வல்லுநர்கள் மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டம்  ஜவுளி மதிப்புத் தொடர் முழுவதையும் பிரதிநிதித்துவம் செய்தது.

 

சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழுவின் (ஐ.சி.ஏ.சி) 81வதுமுழுமையான கூட்டத்தை இந்தியா நடத்துகிறது என்று குறிப்பிட்ட திரு கோயல், அதை வெற்றிகரமாக்க தொழில்துறை மற்றும் வர்த்தக உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்தக் கூட்டம் 2023 டிசம்பர் 2 முதல் 5வரை மும்பையில் "பருத்தி மதிப்புத்  தொடர்- உலகளாவிய வளத்திற்கான உள்ளூர் கண்டுபிடிப்புகள்" என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.  இதில் 26 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் உட்பட ஏறத்தாழ 400 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கஸ்தூரி பருத்தியில்  இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைக் காட்சிப்படுத்தவும், சிறந்த நிலையான நடைமுறைகளைக்  காட்சிப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் பருத்தியின் டி.என்.ஏ பரிசோதனையை ஊக்குவிப்பதற்காக பருத்திக்  குறியீடுகளை உருவாக்கும் திட்டம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்படும் என்று  அமைச்சர் கூறினார். டி.என்.ஏ சோதனை வசதி தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு பெரிய செயல்பாடாகும்.. ஏனெனில் இது நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும்.

 

கஸ்தூரி காட்டன் இந்தியா என்பதன்  கண்டுபிடிப்பு, சான்றிதழ் மற்றும் வணிகச்சின்னம்  குறித்த திட்டத்தின் முன்னேற்றத்தையும் திரு கோயல் மதிப்பீடு செய்தார். இந்தத்  திட்டத்தின் செயலாக்கப் பங்குதாரரான டெக்ப்ரோசில், கஸ்தூரி காட்டனுக்கான வணிகச்சின்ன  உத்தியை  இறுதி செய்துள்ளது. கஸ்தூரி காட்டன் இந்தியா என்ற வணிகச்சின்னம் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய பருத்தி ஜவுளி தயாரிப்புகளை உலக வரைபடத்தில் வைக்க உதவும்.

 

 உள்நாட்டுத் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியப் பருத்தியின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது காலத்தின் தேவை என்பதை  அமைச்சர் வலியுறுத்தினார். சுமார் 9327 ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த பருத்தி பருவத்தில் திட்டத்தை விரிவுபடுத்த முன்னோட்டத் திட்டத்தின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்யலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

 

நிலையான உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், மதிப்புத்  தொடரில் தடமறிதலை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகளுக்கு  வருவாயை அதிகரிக்க, பருத்தியில் மேலாதிக்கத்தை மீண்டும் பெற, அனைத்துப் பங்குதாரர்களும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் என்று மத்திய  இணை அமைச்சர் திருமதி தர்ஷனா வி.ஜர்தோஷ் கேட்டுக்கொண்டார்.

 

 தங்கள் பிரச்சனைகளைக் கலந்தாலோசனை முறையில் தீர்ப்பதற்கான  அமைச்சரின் அணுகுமுறைக்குத்  தொழில்துறை மற்றும் ஜவுளி மதிப்புத் தொடர் பங்குதாரர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

***

 

ANU/SMB/DL


(Release ID: 1953892) Visitor Counter : 253