பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
2023 செப்டம்பர் மாதம் முழுவதும் 6-வது தேசிய ஊட்டச்சத்து மாதமாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடுகிறது
Posted On:
31 AUG 2023 5:10PM by PIB Chennai
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் மற்றும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்களை விரிவான முறையில் மேம்படுத்துவதில் மத்திய அரசின் முன்னோடி முயற்சியான ஊட்டச்சத்துத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமரால் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்துத் திட்டம் (பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துத் திட்டம்), ஊட்டச்சத்துக் குறைபாட்டின் சவாலை எதிர்த்துப் போராடுவதற்காக விரைவாக செயல்படுகிறது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செப்டம்பர் 2023 முழுவதும் 6 வது தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடுகிறது. கர்ப்பம், குழந்தை பருவம், மற்றும் வளரிளம் பருவம். "சுபோஷித் பாரத், சாக்ஷர் பாரத், சஷக்த் பாரத்" (ஊட்டச்சத்து நிறைந்த இந்தியா, படித்த இந்தியா, அதிகாரமளிக்கப்பட்ட இந்தியா) என்ற கருப்பொருளின் மூலம் நாடு முழுவதும் ஊட்டச்சத்து புரிதலை வளர்ப்பதே இதன் நோக்கம்.
ஊட்டச்சத்து விழிப்புணர்வை மேம்படுத்த, நாடு தழுவிய அளவில் இந்த ஒரு மாத நிகழ்வில் கவனம் செலுத்தப்படும். ஸ்வஸ்த் பாலக் ஸ்பார்தா (ஆரோக்கியமான குழந்தை போட்டி) போன்ற நடவடிக்கைகள் ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. போஷன் பி பதாய் பீ (ஊட்டச்சத்து மற்றும் கல்வி), மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை), பழங்குடியினரை மையமாகக் கொண்ட ஊட்டச்சத்து உணர்திறன் மற்றும் சோதனை, சிகிச்சை, பேச்சு மூலம் இரத்த சோகையை நிவர்த்தி செய்தல் ஆகியவை பிற முன்முயற்சிகளில் அடங்கும். இந்த நோக்கத்தை அடைய, தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1 முதல் 30 வரை அனைத்து தரப்பினருடனும் இணைந்து கொண்டாடப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உற்சாகமான பங்கேற்புடன் நாடு முழுவதும் ஐந்து வெற்றிகரமான ஊட்டச்சத்து மாத நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
***
AD/ANU/IR/RS/KPG
(Release ID: 1953850)
Visitor Counter : 219