இந்திய போட்டிகள் ஆணையம்

பிரிலியோ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சில பங்குகளை ஓரோஜென்-புரூன்சன் எல்.பி. நிறுவனம் வாங்க சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.

Posted On: 29 AUG 2023 7:35PM by PIB Chennai

பிரிலியோ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சில பங்குகளை ஓரோஜென்-பிரன்சன் எல்.பி. நிறுவனம் கையகப்படுத்துவதற்கு, இந்தியப் போட்டி ஆணையம் (சி.சி.) ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த நடைமுறையின்படி பிரிலியோ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சில பங்குகளை ஓரோஜென்-புரூன்சன் எல்.பி. நிறுவனம் கையகப்படுத்தும்.

 

வாங்கும் நிறுவனம்

 

ஓரோஜென்-பிரூன்சன் எல்.பி என்பது முன்மொழியப்பட்ட இணைப்பை எளிதாக்குவதற்காக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டு நிறுவனம் ஆகும். இது பின்வரும் குழுக்களின் ஒரு பகுதியாகும்: (i) ஓரோஜென் ஹோல்டிங்ஸ் எல்.எல்.சி குழு மற்றும் (ii) அடெய்ரோஸ் குழுமம், இன்க் நிறுவனம்.

 

இலக்கு நிறுவனம்

 

அமெரிக்காவில் இணைக்கப்பட்ட பிரிலியோ ஹோல்டிங்ஸ், இன்க் நிறுவனம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வுகளில் கவனம் செலுத்தி உலகளாவிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வணிகத் தீர்வுகளை வழங்குகிறது. இந்த இலக்கு நிறுவனம் அதன் துணை நிறுவனமான பிரிலியோ இந்தியா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

 

இந்தப் பங்கு கையகப்படுத்துதலில் இந்தியப் போட்டி ஆணையத்தின் (சி.சி..) விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.

 

Release ID: 1953326

AP/PLM/KRS

 

****(Release ID: 1953408) Visitor Counter : 98


Read this release in: English , Urdu , Hindi