நித்தி ஆயோக்
நித்தி ஆயோக்கின் வளர்ச்சி மையத் திட்டம் வலுவான கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஒரு சான்று
Posted On:
29 AUG 2023 9:02PM by PIB Chennai
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நகரமயமாக்கலின் பங்கு குறித்து விவாதிக்க நித்தி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலான நித்தி ஆயோக் குழு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது.
விடுதலையின் அமிர்தக் காலத்தின் போது வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மகத்தான ஆற்றலை நகர்ப்புறங்கள் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்திய நகரங்கள் இணையற்ற பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இது உணரப்பட வேண்டும். இலக்கை அடைய அரசு அனைத்து மட்டங்களிலும் பல வழிகளை ஆராய்ந்து வரும் நிலையில், நகரப் பகுதிகளை மெகா பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவதற்கான வியூகங்களை வகுப்பது முக்கியமானது.
பொருளாதார வளர்ச்சிக்கு நகரமயமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கூட்டுறவு கூட்டாட்சியை வளர்ப்பதற்கான நித்தி ஆயோக்கின் கொள்கைகளுக்கு இணங்க, நகர-பிராந்தியங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நகர-பிராந்தியங்களுக்கான வலுவான பொருளாதார வளர்ச்சி உத்தியை உருவாக்கவும், அதை அடைவதற்கான திட்டத்தை தயாரிக்கவும் இது முயற்சிக்கிறது. இந்த முயற்சியின் கீழ் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழுவையும் நித்தி ஆயோக் அமைக்கும்.
முதற்கட்டமாக, 4 நகர மண்டலங்கள், பொருளாதார உத்திசார் திட்டத்தை உருவாக்குவதற்கான அம்சங்களுக்கு அங்கு, சோதனை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர், இது மேலும் 16 நகரங்களாக விரிவுபடுத்தப்படும். இவை தவிர, விரும்பிய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு நாடு முழுவதும் உள்ள பிற நகர-பிராந்தியங்களுக்கான முன்மாதிரி பொருளாதார வரைவுத் திட்டம் செயல்படும்.
இதுவரை, மும்பை, சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை சோதனைக் கட்டத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநில பொருளாதாரத்தின் டிரில்லியன் டாலர் இலக்குகளை அடைவதற்கான முன்னுரிமையின் கீழ், மும்பை பெருநகர பிராந்தியத்தில் (எம்.எம்.ஆர்) நிலையான முறையில் பொருளாதாரத் தடத்தை வலுப்படுத்த வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் தற்போதைய 140 பில்லியனில் இருந்து 300 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைவதற்கான உயர்மட்ட செயல்திட்டத்தை உருவாக்க நித்தி ஆயோக் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உதவும். இத்திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் அடங்கிய, மாநில அளவிலான குழுவும் அமைக்கப்படும்.
Release ID: 1953380
AP/PLM/KRS
(Release ID: 1953407)
Visitor Counter : 115