பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரேசில் ராணுவத் தளபதி ஜெனரல் தாமஸ் மிகுவல் மைன் ரிபெய்ரோ பைவா ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்

प्रविष्टि तिथि: 29 AUG 2023 4:45PM by PIB Chennai

பிரேசில் ராணுவத் தளபதி ஜெனரல் தாமஸ் மிகுவேல் மைன் ரிபெய்ரோ பைவா 2023 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரை ஆறு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.  இந்தியா மற்றும் பிரேசில் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவில் இந்த பயணம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் இந்த பயணம் தொடங்கியது, அங்கு ஜெனரல் தாமஸ் நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த இந்திய பாதுகாப்புப்படைகளின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைதி மற்றும் பாதுகாப்பில் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட உறுதிப்பாட்டை இந்தப் புனிதமான நினைவேந்தல் செயல் பிரதிபலிக்கிறது. பின்னர், புதுதில்லியில் உள்ள சவுத் பிளாக் புல்வெளியில் ஜெனரல் தாமஸுக்கு சம்பிரதாய மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவை சந்தித்தார். தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர், ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

பின்னர் ஜெனரல் தாமஸ் மிகுவல் மைன் ரிபெய்ரோ பைவா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகானை சந்தித்து, பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமானேவை சந்தித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1953228

*****

AP/ANU/IR/RS/GK


(रिलीज़ आईडी: 1953294) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी