ஜவுளித்துறை அமைச்சகம்

தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான புத்தொழில் வழிகாட்டுதல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது - தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப ஜவுளிகளை அறிமுகப்படுத்த 26 பொறியியல் நிறுவனங்களுக்கு ஜவுளி அமைச்சகம் அனுமதி

Posted On: 29 AUG 2023 2:06PM by PIB Chennai

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் (என்.டி.டி.எம்) முக்கிய முன்னேற்றங்கள் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜவுளித் துறை இணைச் செயலாளர் திரு ராஜீவ் சக்சேனா விளக்கம் அளித்தார். தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவில் ஆர்வமுள்ள புதுமைக் கண்டுபிடிப்பாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவுக்கான மானிய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வேளாண்-ஜவுளிகள், கட்டிட-ஜவுளிகள், ஜியோ-டெக்ஸ்டைல்ஸ், ஹோம்-டெக்ஸ்டைல்ஸ், மெடிக்கல்-டெக்ஸ்டைல்ஸ், பேக்கேஜிங்-டெக்ஸ்டைல்ஸ், பாதுகாப்பு-ஜவுளிகள், ஸ்போர்ட்ஸ்-டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாடுகளுக்கு மானிய வழிகாட்டுதல்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. உயர் செயல்திறன் கொண்ட இழைகள், நிலையான மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய ஜவுளி பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, 3 டி அல்லது 4 டி பிரிண்டிங் மற்றும் விரைவான புரோட்டோடைப்பிங் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் இதன் முக்கிய அம்சமாகும்.

தொழில் பாதுகாப்பகங்களை ஊக்குவிப்பதற்காக, ஜவுளி அமைச்சகம் மொத்த மானியத்தில் 10 சதவீதத்தை  தொழில் பாதுகாப்பகங்களுக்குக் கூடுதலாக வழங்கும். ஆய்வக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தொழில்நுட்ப ஜவுளி பயன்பாட்டுப் பிரிவில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் 26 நிறுவனங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லி ஐஐடி, ஜலந்தர், என்ஐடி துர்காபூர், என்ஐடி கர்நாடகா, நிஃப்ட் மும்பை, ஐசிடி மும்பை, அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, டெக்ஸ்டைல் டெக்னாலஜி மற்றும் ஃபைபர் சயின்ஸ் துறைகள் உள்ளிட்ட தற்போதுள்ள படிப்புகளை மேம்படுத்தவும், சிறப்பு இழைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளிகளின் அனைத்து பயன்பாடுகளிலும் படிப்புகளை விரிவுபடுத்தவும் பெரும்பாலான நிதி ஒதுக்கப்படும்.

தொழில்நுட்ப ஜவுளிகளின் தரம் மற்றும் ஒழுங்குமுறை அம்சம் குறித்து, அமைச்சகம் ஏற்கனவே 19 ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் 12 பாதுகாப்பு ஜவுளிகள் உட்பட 31 தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகளுக்கான 2  தரக்கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது 2023 அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இது தவிர, 22 அக்ரோடெக்ஸ்டைல்ஸ் மற்றும் 6 மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 28 தயாரிப்புகளுக்கான தரக்கட்டுப்பாட்டு உத்தரவுக்கான நடைமுறைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அவை 2023 செப்டம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்டட ஜவுளிகள், தொழில்துறை ஜவுளிகள், கயிறுகள் மற்றும் கோர்டேஜ்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடுகளும் பரிசீலிக்கப்படுகின்றன.

***

 

ANU/AP/PLM/GK



(Release ID: 1953240) Visitor Counter : 142