வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'சூரியசக்தி டிசி கேபிள் மற்றும் தீ பாதிப்பற்ற கேபிள்' மற்றும் 'வார்ப்பு இரும்புத் தயாரிப்புகளுக்கான' தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை டிபிஐஐடி அறிவிக்கிறது

Posted On: 28 AUG 2023 5:00PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) சமீபத்தில் 'சூரியசக்தி டிசி கேபிள் மற்றும் தீ பாதிப்பற்ற  கேபிள்' மற்றும் 'வார்ப்பு  இரும்புத் தயாரிப்புகள் ஆகியவற்றிற்கான மேலும் 2 புதிய தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (கியூ.சி.) 25 ஆகஸ்ட் 2023 அன்று அறிவித்தது, இது அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முதல் நடைமுறைக்கு வரும்.

'சூரியசக்தி டிசி கேபிள் மற்றும் தீ பாதிப்பற்ற  கேபிள்கள்' முதன்மையாக சோலார் பேனல் வரிசைகள் போன்ற ஒளிமின்னழுத்த அமைப்புகளின் பல்வேறு கூறுகளின் ஒன்றோடொன்று இணைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேபிள்கள் தீவிர வானிலைத் தன்மைகளில், அதிக இயந்திர வலிமையுடன் நெகிழ்வான மற்றும் நிலையான நிறுவல்களுக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படலாம். தீயால் பாதிக்கப்படாத வகையில், வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச காலத்திற்கு அதிக வெப்பநிலையைத் தக்கவைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ இரயில்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

வார்ப்பு இரும்புப் பொருட்கள் (தரக் கட்டுப்பாடு) உத்தரவு, 2023 மேன்ஹோல் கவர்கள், வார்ப்பு இரும்புக் குழாய், மென்மையான இரும்பு பொருத்துதல்கள் மற்றும் சாம்பல் இரும்பு வார்ப்புகள் போன்ற பல்வேறு வார்ப்பு இரும்புப் பொருட்கள் தொடர்பான தரங்களை உள்ளடக்கியது.

தரக்கட்டுப்பாடு அறிவிப்புக்கு முன்னர், முக்கியத் தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்துறை உறுப்பினர்களுடன் அவர்களின் உள்ளீடுகளுக்காக விரிவான  ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த வரைவு கியூ.சி..க்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்தார்.

உள்நாட்டு சிறு/ குறுந்தொழில்களைப் பாதுகாக்கவும், கியூ.சி.., திட்டத்தை சீராக செயல்படுத்தவும், தொழில் துவங்குவதை எளிதாக்கவும், வார்ப்பு இரும்பு பொருட்கள் (தரக்கட்டுப்பாடு) ஆணையில் காலக்கெடுவின் அடிப்படையில் சிறு/ குறுந்தொழில்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

கியூ.சி..க்களை அமல்படுத்துவதன் மூலம்இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி..எஸ்) சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்த முடியும். விதிகளை மீறினால்பி..எஸ் சட்டம், 2016 இன் படி தடை செய்ய நேரிடும். பி..எஸ் சட்டத்தின் விதியை மீறினால் முதல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ .2 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அபராதம் குறைந்தபட்சம் ரூ .5 லட்சமாகவும், பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரை நீட்டிக்கப்படும்.

தரமானப் பொருட்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, "நமது மக்களின் திறன் மற்றும் நாட்டின் நம்பகத்தன்மையுடன், உயர் தரமான இந்திய தயாரிப்புகள் நீண்ட தூரம் பயணிக்கும். "என்று கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, டி.பி...டி தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொழில் துறைகளுக்கு நாட்டில் ஒரு தரக் கட்டுப்பாட்டு முறையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. கியூ.சி..க்கள் நாட்டின் உற்பத்தி தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளின் பிராண்ட் மற்றும் மதிப்பையும் அதிகரிக்கும். இந்த முன்முயற்சிகள், வளர்ச்சி சோதனை ஆய்வகங்கள், தயாரிப்பு கையேடுகள், சோதனை ஆய்வகங்களின் அங்கீகாரம் போன்றவற்றுடன் இணைந்து இந்தியாவில் ஒரு தரமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும்.

 

(வெளியீட்டு ஐடி: 1952953)


AD/ANU/ PKV/KRS


(Release ID: 1953046) Visitor Counter : 187