விவசாயத்துறை அமைச்சகம்
துணை ராணுவப் படைகளின் உணவகங்களில் பணியாற்றும் சமையலர்களுக்கு சிறுதானிய உணவுகளை மையமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சித் திட்டத்துக்கு வேளாண் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
26 AUG 2023 2:24PM by PIB Chennai
சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகளை மையமாகக் கொண்டு, துணை ராணுவம் மற்றும் பல்வேறு அரசுத் துறை கேண்டீன்களில் (உணவகங்கள்) பணியாற்றும் 200 க்கும் மேற்பட்ட சமையல் கலை வல்லுநர்களுக்கு மத்திய வேளாண்மை துறை இரண்டு நாள் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தில்லியில் இன்று (26.08.2023) தொடங்கிய இந்தப் இப்பயிற்சி, சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எளிய தின்பண்டங்கள் முதல் ஆரோக்கியமான உணவுகள் வரை பலவிதமான சிறுதானிய சமையல் குறிப்புகளை அறிமுகப்படுத்தி அவை தொடர்பாக இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சமையலர்கள் அவர்கள் பணிபுரிடம் அரசுத் துறை உணவகங்களில் இவற்றை சமைத்து வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.
மத்திய வேளாண் துறையின் கூடுதல் செயலாளர்கள் திரு பைஸ் அகமது கித்வாய், திருமதி மனீந்தர் கவுர் திவிவேதி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த ஊக்குவித்தனர்.
அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்பு படை, சசஸ்த்ரா சீமா பால் மற்றும் பல்வேறு அரசுத் துறை கேண்டீன்களில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட சமையல் கலை வல்லுநர்களுக்கான இந்த சிறுதானிய சமையல் பயிற்சி வகுப்பு ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.எச்.எம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக (ஐஒய்எம்) கொண்டாடப்படுவதையொட்டி தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
----
Release ID: 1952434
ANU/SM/PLM/KRS
(Release ID: 1952531)
Visitor Counter : 148