அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"ஒரு வாரம் ஒரு ஆய்வகம்" இயக்கத்தின் கீழ் மாணவர்கள் - விஞ்ஞானிகள் தொடர்புத் திட்ட நிகழ்வு கொல்கத்தாவில் உள்ள சிஎஸ்ஐஆர்- சிஜிசிஆர்ஐ நிறுவனத்தில் நடைபெற்றது

Posted On: 26 AUG 2023 10:35AM by PIB Chennai

"ஒரு வாரம் ஒரு ஆய்வகம்" இயக்கத்தின் கீழ், கொல்கத்தாவில் உள்ள மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய கண்ணாடி மற்றும் செராமிக் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் - சிஜிசிஆர்ஐ) நேற்று (25-08-2023) பள்ளி மாணவர்களுடான தொடர்புத் திட்டத்தை செயல்படுத்தியது. இது பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பதையும், பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. சிஎஸ்ஐஆர்- சிஜிசிஆர்ஐ நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.கே.மிஸ்ரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் பங்கேற்று, தேசத்தைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளில் சிஎஸ்ஐஆர்-யின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.

இதில், 7 பள்ளிகளை சேர்ந்த, 295 மாணவர்கள், 28 ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நேரடி கலந்துரையாடல் அமர்வுகள், சிஎஸ்ஐஆர் - சிஜிசிஆர்ஐ–யின் தயாரிப்புகள் குறித்த செயல்விளக்கங்கள், அறிவியல் வினாடி வினா போட்டிகள், மெய்நிகர் ஆய்வக தளங்கள் என பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு அறிவியல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.  பல்வேறு துறைகளில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சிஎஸ்ஐஆர் - சிஜிசிஆர்ஐ  மேம்பட்ட தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி  விளக்கம் அளித்தனர்.

----

ANU/SM/PLM/DL



(Release ID: 1952490) Visitor Counter : 128