கலாசாரத்துறை அமைச்சகம்
நான்காவது ஜி 20 கலாச்சார பணிக்குழுக் கூட்டம் வாரணாசியில் இன்று நிறைவடைந்தது - கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது
Posted On:
25 AUG 2023 7:40PM by PIB Chennai
ஜி 20 உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நான்காவது ஜி 20 கலாச்சார பணிக்குழுக் கூட்டத்தில் வரைவு பிரகடனம் குறித்த விவாதங்கள் வாரணாசியில் இன்று (25-08-2023) நிறைவடைந்தன. கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் நாளை (26-08-2023) வாரணாசியில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, வாரணாசி கலாச்சாரக் கூட்டங்கள் கலாச்சாரத் துறை தொடர்பான பல பரிமாணங்களைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கின என்றார்.
ஜி 20 கலாச்சார பணிக்குழு கூட்டங்கள் குறித்து சுருக்கமாகக் கூறிய அவர், முதல் கலாச்சார குழு கூட்டம் கஜுராஹோவிலும், இரண்டாவது புவனேஸ்வரிலும், மூன்றாவது கர்நாடகாவின் ஹம்பியிலும், நான்காவது இப்போது வாரணாசியிலும் நடைபெற்றது என்றார். அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவில் வாரணாசி கலாச்சார அமைச்சர்கள் பிரகடனம் நாளை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் நாட்டின் கலாச்சாரத்தின் அழகான கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
வசுதைவ குடும்பகம் என்ற தலைப்பில் 29 நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து நாளை பிரமாண்டமான கலாச்சார இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலாச்சாரத் துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன் தெரிவித்தார்.
பணிக்குழுக் கூட்ட அமர்வுகள் முடிந்ததும், ஜி 20 பிரதிநிதிகள் சந்த் ரவிதாஸ் படித்துறைக்கு கங்கை நதியில் உற்சாகப் பயணம் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பிரமாண்டமான கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கங்கா ஆரத்தி என்பது வாரணாசியில் தினமும் காலை மற்றும் மாலையில் புனித கங்கை நதிக்கு மரியாதை செலுத்தும் ஒரு அழகான சடங்காகும்.
அதன் பின்னர், பிரபல நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான ராணி கானம் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியை பிரதிநிதிகள் கண்டுகளித்தனர்.
Release ID=1952247
SM/PLM/KRS
(Release ID: 1952332)
Visitor Counter : 168