உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிரேக்கத்தின் மதிப்புமிக்க 'தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருது பெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 AUG 2023 6:01PM by PIB Chennai

கிரேக்கத்தின் மதிப்புமிக்க 'தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருது பெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

"சமூகங்களை இணைத்தல், இதயங்களை இணைத்தல், தது தனித்துவமான ராஜீய செயல்பாடுகளால் நாடுகளை ஒன்றிணைத்தல் என்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு நாடுகளிலிருந்து கௌரவத்தைப் பெற்றுவருகிறார். ஒரு நாட்டிலிருந்து மோடி அவர்கள் பெறும் பாராட்டு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையாகும். இந்த விருதுகள் நாட்டின் பெருமிதத்தை உயர்த்துகின்றன. கிரேக்கத்தின் மதிப்புமிக்க 'தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருது பெற்ற மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்என்று உள்துறை அமைச்சர் தது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளார்.

***

SM/ANU/SMB/RS/KRS

(Release ID: 1952184)


(रिलीज़ आईडी: 1952285) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri