வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

"கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் நிலைத்தன்மை, பருவநிலை மீள்திறன் ஆகியவை சேர்க்கப்பட வேண்டும்." -திரு ஹர்தீப் எஸ்.பூரி

Posted On: 25 AUG 2023 4:02PM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மீள் திறனை சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற திட்டமிடல் குறித்த தொலைநோக்கு அவசியமாகும் என்றும்  அவர் கூறினார். கட்டுமானத் துறையில் புதிய மற்றும் வளர்ந்து வரும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது குறித்த மாநாட்டைத் தொடங்கி வைத்த அமைச்சர், மோடி அரசு நகரமயமாக்கலை பன்முக வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது, எனவே திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலுக்கான மிக விரிவான திட்டங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார். இந்தப் பின்னணியில்தான், அமைச்சகத்தின் முதன்மை வீட்டுவசதித் திட்டமான பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் -நகர்ப்புறம் (பி.எம்.ஏ.ஒய்-யு) குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இது நிலையான மற்றும் பசுமை உள்கட்டமைப்பை உருவாக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீட்டுவசதி பிரச்சனையை நிவர்த்தி செய்துள்ளது. இத்திட்டத்தில் பசுமை கட்டுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை  விளக்கிய திரு பூரி, இந்த திட்டத்தின் கீழ் சுமார் 43.3 லட்சம் வீடுகள் ஃப்ளைஆஷ் செங்கல் / பிளாக்குகள் மற்றும் ஏ.ஏ.சி பிளாக்குகள் போன்ற நிலையான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த வீடுகள் 2024 டிசம்பர் இறுதிக்குள் 9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க பங்களிக்கும்.

வீட்டுவசதி கட்டுமானத் துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வர, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உலகளாவிய வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் இயக்கத்தின் கீழ் உலகெங்கிலும் இருந்து 54 புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களை பட்டியலிட்டுள்ளது. மேலும், சென்னை, ராஜ்கோட், இந்தூர், லக்னோ, ராஞ்சி மற்றும் அகர்தலாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஆறு முக்கிய திட்டங்களின் கீழ் 6,368 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பல நன்மைகளை அமைச்சர் பகிர்ந்து கொண்டார், இதில் கட்டுமான செலவு, நேரம், பயன்படுத்தப்படும் சிமெண்ட் மற்றும் உற்பத்தி செய்யப்படும் கழிவுகள், மேம்பட்ட வெப்ப வசதி மற்றும் குறைந்த வாழ்க்கை சுழற்சி செலவுகள் ஆகியவை அடங்கும்.

புதிய மற்றும் தற்சார்பு இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு இது பங்களிக்கும் என்பதால், சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரமான வீட்டுவசதியை வழங்க வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. கௌஷல் கிஷோர் வலியுறுத்தினார்.   இந்த கட்டுமானப் பொருட்கள் நாட்டின் வெவ்வேறு புவி-பருவநிலை மற்றும் ஆபத்து நிலைமைகளுக்கு ஏற்ப விரைவான மற்றும் சிறந்த தரமான வீட்டுக் கட்டுமானத்திற்கு உதவுகின்றன. கிரெடாய் அமைப்புடன் இணைந்து  இந்த மாநாடு நடத்தப்பட்டது.

***

 

SM/PKV/AG/KPG

 



(Release ID: 1952223) Visitor Counter : 178


Read this release in: Hindi , English , Urdu , Telugu