குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அதிகார தரகர்களின் காலம் முடிந்துவிட்டது – அது இனி புத்துயிர் பெற முடியாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்
Posted On:
25 AUG 2023 4:19PM by PIB Chennai
சந்திரயான் -3-ன் வெற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாகக் குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். புது தில்லி மேலாண்மை நிறுவனத்தின் 25-ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று (25-08-2023) உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நமது மகத்தான சாதனைகள் குறித்து மாணவர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இஸ்ரோவின் விஞ்ஞானிகளை ஊக்குவித்த பிரதமரின் செயலை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றுவதாகவும் இந்தியாவை உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது அதிகார அமைப்புகள், அதிகார தரகர்களால் செயல்பட்ட நிலை முழுமையாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், அதிகார தரகர்களின் காலம் முடிந்து விட்டது என்றும் அது ஒருபோதும் புத்துயிர் பெற முடியாது எனவும் தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை நிர்வாகத்தின் அடையாளமாகும் என்று அவர் தெரிவித்தார். இப்போது ஊழலுக்கு எதிராத எந்தவித சமரசங்களும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நமது நீதித்துறை மிகவும் வலுவானது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், சட்டத்தை மீறியதற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்போது, அந்த நபருக்காகத் தெருக்களில் இறங்கிப் போராடும் கலாச்சாரம் மாற வேண்டும் என்று கூறினார்.
சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரே வழிமுறை கல்வி என்று கூறிய திரு ஜக்தீப் தன்கர், தாங்கள் பெற்ற பலன்களை சமூகத்திற்குப் பகிர்ந்து கொடுக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கற்றலை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்றும் அறிவைப் பெறும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்,
புதுதில்லி மேலாண்மை நிறுவன வாரியத்தின் இயக்குநர் நீதிபதி திரு பி.பி.சிங், மத்திய அரசின் தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் பேராசிரியர் திரு அனில் சஹசர்புத்தே, புதுதில்லி மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் திரு.வி.எம்.பன்சால், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
SM/ANU/PLM/KPG
(Release ID: 1952222)
Visitor Counter : 136