சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மின் நீதிமன்றத் திட்டத்தின் கீழ் கணினிமயமாக்கல் பணிகள்

Posted On: 23 AUG 2023 3:27PM by PIB Chennai

பரந்த கணினி கட்டமைப்பு (விஏஎன்) திட்டம், கண்ணாடி இழை கேபிள் (ஓஎஃப்சி), ரேடியோ ஃப்ரீகுவன்சி (ஆர்எஃப்), வி சாட் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் அனைத்து மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்ற வளாகங்களை இணைப்பதை மின் நீதிமன்றங்கள் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 2992 இடங்களில் மார்ச் 2023 வரை 2976 இடங்களில் விநாடிக்கு 10 மெகா பைட் முதல் 100 மெகா பைட் அலைவரிசை வேகம் கொண்ட அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. 99.5 சதவீத இடங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தரவுகள்  இணைப்பை உறுதி செய்யும் மின் நீதிமன்றங்கள் திட்டத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.

பல நீதிமன்றங்கள் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. அதுபோன்ற நீதிமன்றங்களில் மின் நீதிமன்றத் திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத நிலை உள்ளது. இந்த இடங்களில் தரைவழி கேபிளைப் பயன்படுத்த முடியாது. இந்த இடங்கள் ரேடியோ ஃப்ரீகுவன்சி, விசாட், நீர்மூழ்கி கேபிள் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன. 2019-ம் ஆண்டில் தொழில்நுட்ப ரீதியாக  சாத்தியமில்லாத இடங்கள் 58-ஆக இருந்தது. மாற்று வழிகளைப் பயன்படுத்தி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம், 2022-ம் ஆண்டில் அதை  11-ஆக குறைக்க முடிந்தது. இதன் விளைவாக ரூ.95.45 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த 11 இடங்களிலும் மின் நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 சூழ்நிலையில், டபிள்யுஏஎன் இணைப்பு சிறந்த காணொலி வசதிகளை ஏற்படுத்தி தந்தது.

***

AP/ANU/PLM/RS/GK



(Release ID: 1951421) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Marathi , Hindi