அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆர்-சி.ஜி.சி.ஆர்.ஐ.யில் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் திட்டம்
प्रविष्टि तिथि:
23 AUG 2023 1:23PM by PIB Chennai
சமூகத்தின் பல அடுக்குகளுடன் ஆய்வகங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைப்பை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன், சி.எஸ்.ஐ.ஆர் ஒரு தனித்துவமான 'ஒரு வாரம் ஒரு ஆய்வகம்' (ஓ.டபிள்யூ.ஓ.எல்) திட்டத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ.ஆரின் துணைத் தலைவராகவும் அவர் உள்ளார்.
கொல்கத்தாவின் சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான (சி.ஜி.சி.ஆர்.ஐ) ஒரு வாரம் ஒரு ஆய்வகம் அறிமுக திட்டம் 22.08.2023 அன்று நிறுவனத்தில் நடைபெற்றது. கொல்கத்தா இந்திய அறிவியல் சங்கத்தின் (ஐ.ஏ.சி.எஸ்) இயக்குனர் டாக்டர் ரஞ்சன் சென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துணைத் தலைவர் டாக்டர் தேபாஷிஸ் பட்டாச்சார்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
***
ANU/PKV/GK
(रिलीज़ आईडी: 1951385)
आगंतुक पटल : 183