எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு அமைச்சகத்தின் செயலாளர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்ஐஎன்எல் நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு அந்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினார்

Posted On: 23 AUG 2023 11:24AM by PIB Chennai

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (ஆர்ஐஎன்எல்) நிறுவனத்துக்கு  மத்திய எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா, முதல்முறையாக செவ்வாய்க்கிழமை (22.08.2023) நேரில் சென்று பார்வையிட்டார்.  இரண்டாவது மற்றும் மூன்றாவது உலை, புதிய காற்று பிரிப்பு பிரிவு மற்றும் கம்பி ஆலை போன்ற பல்வேறு உற்பத்திப் பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.

ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் செயல்திறனை அதன் மூத்த அதிகாரிகளுடன் மதிப்பாய்வு இணைந்து அவர் ஆய்வு செய்தார்.   ஆலை பராமரிப்பு மற்றும் அதன் ஊழியர்களின் செயல்பாடுகளை  அவர் பாராட்டினார்.    நாட்டின் தலைசிறந்த எஃகு ஆலையாக உருவெடுக்கும் வகையில் ஆர்ஐஎன்எல் நிறுவனம் தமது உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்த முடியும் என்று திரு சின்ஹா கூறினார்.

எஃகு நிர்வாக சங்கம், பல்வேறு தொழிற்சங்கங்கள், ஓபிசி சங்கம்,  மற்றும் எஸ்.சி-எஸ்.டி ஊழியர் சங்கத்தினருடன் உரையாடிய திரு நாகேந்திர நாத் சின்ஹா நிறுவனத்தின் கூட்டு முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

*****

AD/ANU/PLM/RS/GK


(Release ID: 1951347) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Punjabi