பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறை செய்தியாளர்கள் பயிற்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படை தளத்தில் தொடங்கியது

Posted On: 22 AUG 2023 11:00AM by PIB Chennai

தேசிய மற்றும்  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊடக நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் மூன்று வார பயிற்சிப் பாடத்திட்டமான பாதுகாப்புத்துறை செய்தியாளர்கள் பாடத்திட்டம் (டி.சி.சி)- 2023” விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படைத் தளத்தில் (ஈ.என்.சி) 21.08.2023 அன்று தொடங்கியது. கிழக்கு கடற்படைத் தளத்தின்  தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா தொடக்க உரை நிகழ்த்தினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் கூடுதல்  தலைமை இயக்குநர் திரு ஏ.பரத் பூஷன் பாபு, பாதுகாப்புத்துறை இதழியல் தொடர்பான விளக்கங்களை எடுத்துரைத்தார். ஊடகங்களுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான தொடர்பை அதிகரிப்பது,  ஊடகவியலாளர்கள் ஆயுதப்படைகளைப் பற்றி சிறந்த புரிதலைப் பெறுவது, முழுமையான புரிதலுடன் கடல்சார் சூழல் தொடர்பான செய்திகளை வெளியிடுவது ஆகிய நோக்கங்களுக்காக இந்தப் பயிற்சிப் பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சியின்போது, கடற்படை மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்த பாட வல்லுநர்கள், பத்திரியாளர்களுடன் கலந்துரையாடுவார்கள். கடற்படை நடவடிக்கைகள், கடற்படை உத்திகள், மனிதாபிமான உதவிகள், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஊடகவியலாளர்களுக்கு எடுத்துரைக்கப்படும். பயிற்சியின் ஒரு பகுதியாக, அதில் பங்கேற்றுள்ளவர்கள் 21.08.2023 அன்று அங்குள்ள இந்திய கடற்படை கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலைப் பார்வையிட்டனர். அவர்கள், இந்த வாரத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளம், கடற்படை விமான நிலையம் மற்றும் கடலோர காவல்படை கப்பல்களை பார்வையிட உள்ளனர்.

***

ANU/AD/PLM/RS/KPG



(Release ID: 1951022) Visitor Counter : 146