பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 'அஸ்மிதா' கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பு- ராணுவ வீரர்களின் மனைவியர் நலச்சங்க முன்னெடுப்பு

Posted On: 21 AUG 2023 4:51PM by PIB Chennai

புதுதில்லி மானேக்ஷா மையத்தில்ராணுவ வீர்ர்களின் மனைவியர் நலச்சங்கம் சார்பில்'அஸ்மிதா  ராணுவ வீரர்களின் மனைவியர்களின் எழுச்சியூட்டும் கதைகள்' இரண்டாவது பகுதி நடைபெற்றது. பல்வேறு சவால்களை கடந்துவிடாமுயற்சி மற்றும் மீள்திறன் மூலம்பல்வேறு துறைகளில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிய ராணுவ வீரர்களின் மனைவியரின் உத்வேகமூட்டும் கதைகளைப் பகிர்ந்து கொள்ள இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். குடியரசு துணைத்தலைவரின் மனைவி டாக்டர் சுதேஷ் தன்கர் மற்றும் வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ராணுவ வீரர்களின் மனைவியர் நலச்சங்கத் தலைவர் திருமதி அர்ச்சனா பாண்டே தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ராணுவ வீரர்களின் மனைவியர் நலச்சங்கம் என்பது இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் துணைவிகுழந்தைகள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களின் நலனுக்காக செயல்படும் ஒரு சங்கமாகும். இச்சங்கம் 1966 ஆகஸ்ட் 23 அன்று தில்லி நிர்வாகத்தின் சங்கங்களின் பதிவாளரிடம் ஒரு நலச் சங்கமாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இன்று இது நாட்டின் மிகப்பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக பெருமை கொள்கிறது.

'அஸ்மிதாஎன்பது துணிச்சலான ராணுவ வீரர்களின் மனைவியர் மற்றும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தளமாகும். இது பயங்கரமான சவால்களை எதிர்கொண்டு இன்னும் தலைநிமிர்ந்து நின்ற துணிச்சலான பெண்களின் போராட்டத்திற்கான மரியாதையாகும்.

'அஸ்மிதா'வின் முதல் பகுதி 14 அக்டோபர் 2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டதுபேச்சாளர்கள் வீரமங்கைகள்ராணுவ வீரர்களின் வாழ்க்கைத் துணைவிகள்கலைஞர்கள்மருத்துவர்கள்எழுத்தாளர்கள்புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர். அதைத் தொடர்ந்து 11 பிப்ரவரி 2023 அன்று கொல்கத்தாவில் 'அஸ்மிதா புர்பாநடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் மகத்தான வெற்றியைப் பெற்றனமேலும் பல ராணுவ வீரர்களின் மனைவியர்களுக்கு அவர்களின் இலக்குகளை அடைய வழிகாட்டுதல் மற்றும் உத்வேகம் அளிக்கப்பட்டன. இது மேலும்  'அஸ்மிதா பகுதி 2' ஐ ஏற்பாடு செய்ய ராணுவ வீரர்களின் மனைவியர் நலச்சங்கத்திற்கு வழிவகுத்தது.

'அஸ்மிதா'வின் இந்தப்பகுதியில் திருமதி ஜெய பிரபா மஹ்தோ (ஜார்க்கண்ட் அறிவியல் ஆசிரியர்)டாக்டர் சஞ்சனா நாயர் (எழுத்தாளர்சமூக ஆர்வலர் மனநல ஆலோசகர்நிறுவனர்- சஃப்ரோனியா ஹோலிஸ்டிக்)திருமதி வந்தனா மகாஜன் (புற்றுநோய் பராமரிப்பு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு ஆலோசகர்)திருமதி அம்ப்ரீன் ஜைதி (எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர்)கேப்டன் யாஷிகா எச் தியாகி (ஓய்வு)கார்கில் போர் வீரர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 மேலும்இரண்டு விருந்தினர் பேச்சாளர்கள்மலையேற்ற வீராங்கனை திருமதி அருணிமா சின்ஹா மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞர் திருமதி ஆனந்த சங்கர் ஜெயந்த் ஆகியோரும் பார்வையாளர்களிடையே உரையாற்றினர். இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக தொழில்முனைவோர் கண்காட்சி நடைபெற்றது.  இது ராணுவ வீரர்களின் மனைவியரின் மிகச்சிறப்பான தொழில்முனைவோர் திறன்களை வெளிப்படுத்தியது. அங்கீகாரம் பெற்ற பேச்சாளர்களால் தொகுக்கப்பட்ட'அஸ்மிதா- ராணுவ  வீரர்கள் மனைவியரின் உத்வேகமூட்டும் கதைகள்பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியதுடன்அவர்களின் கனவுகளை நனவாக்கவும் தூண்டியது.

***

ANU/AD/IR/AG/GK


(Release ID: 1950860) Visitor Counter : 148