பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

டாக்டர் ஜிதேந்திர சிங், லக்னோவில் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, மாநிலத்திற்கான டிஜிட்டல் ஆளுகைத் திட்டம் குறித்து விவாதித்தார்.

Posted On: 20 AUG 2023 5:09PM by PIB Chennai

மத்திய அறிவியல் & தொழில்நுட்பம்; பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையச்சர்  டாக்டர். ஜிதேந்திர சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2023 அன்று லக்னோவில் சந்தித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், உத்தரப் பிரதேசத்திற்கான டிஜிட்டல் ஆளுகைத் திட்டம் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

 நல்லாட்சி குறியீட்டில் உத்தரப் பிரதேசத்தின் செயல்திறன் 8.9% அதிக  வளர்ச்சி கண்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் முதலிடத்தை மாநிலம் பெற்றுள்ளது. சமூக நலம் மற்றும் மேம்பாடு, நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றிலும் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசம் பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பது உட்பட குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

டாக்டர் ஜிதேந்திர சிங், மாநில நிர்வாகம் ,அடிப்படையிலான செயல்திறன் ஊக்குவிப்பு முறையை வடிவமைத்து சிறந்த நடைமுறைகளுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றும்,பிரதமர் விருதுகளின் மாதிரியில் நல்லாட்சி/நடைமுறைகளுக்கான முதலமைச்சர் விருதுகளை நிறுவ வேண்டும் என்றும் முன்மொழிந்தார்.

2023 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தினத்தில் ராம்பூர் மற்றும் சித்ரகூட் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான பிரதமர் விருதுகளைப் பெற்றதற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல புதுமையான நடைமுறைகள் நிர்வாகம் மற்றும் மின்-ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பிரதமர் விருதுகளைப் பெற்றுள்ளன.

உத்தரபிரதேசத்தில் 714 அரசு சேவைகளை ஆன்லைனில் வழங்கியதற்காக யோகி ஆதித்யநாத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்குறைகளை தீர்ப்பதற்கான தரவரிசையில் மாநிலம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளதையும் அவர்  பாராட்டினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும்  பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஜிதேந்திர சிங், லக்னோவில் பயோடெக்னாலஜி பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை மூலம் விரைவில் நிலம் ஒதுக்க வேண்டும் என்று .பி முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.

 

**********

SM/PKV/KRS



(Release ID: 1950625) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi , Telugu