வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் 2023,ஆகஸ்ட் 24 அன்று ஜெய்ப்பூரில் தொடங்குகிறது

Posted On: 18 AUG 2023 5:25PM by PIB Chennai

ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் 2023, ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக 4-வது மற்றும்  இறுதியான வர்த்தகம், முதலீட்டு பணிக்குழுவின்  கூட்டம் ஜெய்ப்பூரில்  ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

அமைச்சர்கள் நிலையிலான இந்தக்கூட்டம் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு ஜி20 உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான வழியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் மையப்பொருளான வசுதைவக் குடும்பம் என்பதற்கு இணங்க, அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான வளர்ச்சியை உருவாக்க தற்போதுள்ள வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.

ஐந்து உத்தேச முன்னுரிமை விஷயங்களின் தொடர்பு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு வணிக நிதி, வணிகம் மற்றும் தொழில்நுட்பம், வணிக கட்டமைப்பு ஆகியவை பற்றிய பக்க நிகழ்வுகள் ஏற்கனவே மும்பை, பெங்களூரு ஏக்தா நகர் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.  உலகளாவிய வர்த்தகச்சூழலைக் கட்டமைப்பதற்கான கூட்டு செயல்திட்டங்கள் குறித்த சிந்தனையை விரிவுபடுத்துவது இந்த கருத்தரங்குகளின் நோக்கமாக இருந்தது.

------------

SM/ANU/SMB/RS/KRS


(Release ID: 1950241) Visitor Counter : 176


Read this release in: English , Urdu , Hindi , Telugu