எரிசக்தி அமைச்சகம்
என்.டி.பி.சி.யின் 660 மெகாவாட் சூப்பர் அனல் மின் திட்டத்தை பீகார் மாநிலம் பார்ஹில் மத்திய மின்துறை அமைச்சர் அர்ப்பணிக்கிறார்
प्रविष्टि तिथि:
17 AUG 2023 5:54PM by PIB Chennai
மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே.சிங் ஆகஸ்ட் 18, 2023 அன்று பீகாரின் பார்ஹ் நகரில் என்.டி.பி.சியின் பார்ஹ் சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் அளவை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். 660 மெகாவாட் திறன் கொண்ட இந்த அலகு திட்டத்தின் முதல் கட்டத்தின் 2வது அலகு ஆகும். இந்த அலகு செயல்பாட்டுக்கு வருவது நாட்டிற்கு நம்பகமான மற்றும் மலிவான கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதற்கான அரசின் முயற்சியில் மற்றொரு அம்சமாக இருக்கும்.
மின்கட்டமைப்பின் 400/132 கிலோ வோல்ட் லக்கிசராய் துணை மின் நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் 18 ஆகஸ்ட் 2023 அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த துணை மின் நிலையம் மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்கட்டமைப்பு நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள துணை மின் நிலைய வளாகங்களில் 220 கிலோ வோல்ட் ஜி.ஐ.எஸ் கட்டப்படுவதோடு, 500 எம்.வி.ஏ திறன் கொண்ட 2 மின்மாற்றிகள் நிறுவப்படும்.
லக்கிசராய் துணை மின் நிலையத்தை நீட்டிப்பதன் மூலம் லக்கிசராய், ஷேக்புரா, முங்கர் மற்றும் ஜமுய் மாவட்டங்களில் மின் இருப்பு மேம்படுவதோடு, எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மின் விநியோகத்தை எளிதாக்கும். லக்கிசராய் துணை மின் நிலையத்தில் 220 கிலோ வோல்ட் மின்னழுத்த அளவிலான அதிநவீன ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பத்தை நிறுவுவது இப்பகுதியை தேசிய கட்டமைப்புடனான இணைப்பை மேலும் வலுப்படுத்தும். தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இப்பகுதியின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
***
SM/ANU/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1949984)
आगंतुक पटल : 181