இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் விவகாரத் துறை நடத்தும் ஜி 20 இன் கீழ் ஒய் 20 உச்சி மாநாடு 2023 ஆகஸ்ட் 17 முதல் 20 வரை வாரணாசி உச்சிமாநாட்டில் தொடங்கியது
Posted On:
17 AUG 2023 1:40PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர் 20 உச்சி மாநாடு -2023 வாரணாசியில் இன்று தொடங்கியது.
இளைஞர் விவகாரத் துறை இயக்குநர் திரு பங்கஜ் குமார் சிங், வாரணாசி மாவட்ட ஆட்சியர் திரு எஸ்.ராஜலிங்கம், ஒய் 20 தலைவர் திரு அன்மோல் சோவித் ஆகியோர் ஆகஸ்ட் 16 அன்று வாரணாசியில் நடைபெற்ற ஒய் 20 உச்சி மாநாட்டின் முன்னேற்பாடு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர் .
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் விவகாரத் துறை இயக்குநர் திரு பங்கஜ் குமார் சிங், இந்திய ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை 2023 ஆகஸ்ட் 17 முதல் 20 வரை உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இளைஞர் 20 உச்சிமாநாடு-2023 ஐ நடத்துவதாக தெரிவித்தார்.
ஒய் 20 உச்சிமாநாட்டில் முக்கிய நிபுணர்கள், ஜி 20 நாடுகளைச் சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், கல்வி கூட்டாளர்கள் (பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள்) ஆகியோர் ஒருங்கிணைந்து பங்கேற்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற விவாதங்கள் முடிவுகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை, இறுதி செய்தல் போன்றவற்றிற்காக வாரணாசியில் நடைபெறும் ஒய் 20 உச்சிமாநாடு ஜி 20 நாடுகளைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்கும் என்று அவர் விளக்கினார்.
இந்த ஒய் 20 அறிக்கை அடையாளம் காணப்பட்ட ஐந்து கருப்பொருள்கள் குறித்த எங்கள் பொதுவான அணுகுமுறையின் சாராம்சத்தை பிரதிபலிக்கும் என்றும், உயர் மட்டத்தில் கொள்கை முடிவுகளை எடுப்பவர்கள் இளைஞர்களின் கருத்துக்களை கேட்பதை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஒய் 20 உச்சி மாநாட்டில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திரு நிசித் பிரமானிக் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜி 20 நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பிரதிநிதிகள் ஒய் 20 இன் அடையாளம் காணப்பட்ட ஐந்து கருப்பொருள்கள் குறித்து விவாதிப்பார்கள், இதில் பணிச்சூழல் எதிர்காலம்: தொழில் 4.0, கண்டுபிடிப்பு மற்றும் 21 ஆம் நூற்றாண்டு திறன்கள், அமைதியை உருவாக்குதல் மற்றும் நல்லிணக்கம்: போர் இல்லாத சகாப்தத்தை உருவாக்குதல், பருவநிலை மாற்றம் மற்றும் பேரழிவு ஆபத்து குறைப்பு: நிலைத்தன்மையை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுதல், பகிரப்பட்ட எதிர்காலம்: ஜனநாயகம் மற்றும் ஆளுமை, சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் விளையாட்டுகளில் இளைஞர்கள்: இளைஞர்களுக்கான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட கருப்பொருட்களில் விவாதம் நடைபெற உள்ளது.
------
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1949836)
Visitor Counter : 135