குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மேற்கு வங்கத்திற்கு நாளை பயணம்

Posted On: 16 AUG 2023 7:21PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (ஆகஸ்ட் 17, 2023) மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் .

 

கொல்கத்தாவில் ஒரு நாள் தங்கியிருக்கும் குடியரசுத் தலைவர், கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்துள்ள போதையில்லா இந்தியா இயக்கத்தின் கீழ் 'எனது வங்காளம், “போதை இல்லா வங்காளம்” இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்திய கடற்படையின் 17 ஏ திட்டத்தின் ஆறாவது கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

***

 (Release ID: 1949637)

AD/ANU/IR/RS/KRS


(Release ID: 1949683)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi