நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரித் துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்க ஹேக்கத்தான்

Posted On: 14 AUG 2023 5:54PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரித் துறையில் மேக் இன் இந்தியா முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட் அப்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, மத்திய கனிம திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் , ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஹேக்கத்தான் நடத்தியது

ஹேக்கத்தான் நோக்கத்திற்காக ஒரு மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு, நிலக்கரி அமைச்சகம், கோல் இந்தியா நிறுவனம்  வலைத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்மொழிவு சமர்ப்பிப்பு 12.06.2023 அன்று தொடங்கி 12.08.2023 அன்று முடிவடைந்தது. இந்த ஹேக்கத்தானுக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஒட்டுமொத்தமாக, மதிப்பீடு மற்றும் தேர்வு அளவுகோல்களின்படி, 34 முன்மொழிவுகள் பெறப்பட்டன. பங்கேற்பாளர்கள் ஆகஸ்ட் 2023 கடைசி வாரத்தில் ஐஐடி காராப்பூர், ஐஐடி-ஐஎஸ்எம் தன்பாத், ஐஐடி-பிஹெச்யூ வாரணாசி, ஐஐஐடி ராஞ்சி, எஸ்சிசிஎல் கோத்தகுடம், சிஎம்பிடிடிஐ, சிசிஎல், என்சிஎல் மற்றும் சிஐஎல் ஆகியவற்றின் பேராசிரியர்கள் / பாட வல்லுநர்களைக் கொண்ட புகழ்பெற்ற நீதிபதிகள் முன் ஆன்லைனில் விளக்கக்காட்சியை வழங்க வேண்டும்.

நடுவர்கள் ஒவ்வொரு பிரச்சினை அறிக்கைக்கும் முதல் 3 முன்மொழிவுகளைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் 15.09.2023 அன்று ராஞ்சியில் உள்ள சி.எம்.பி.டி..யில் நேரில் கௌரவிக்கப்படுவார்கள்.

நிலக்கரித் துறையில் ஸ்டார்ட் அப் திறமைகளை ஊக்குவிப்பதிலும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும் நிலக்கரி அமைச்சகம் உறுதியாக உள்ளது. வெற்றிகரமான ஹேக்கத்தான் நிகழ்வு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கான திறனுக்கு ஒரு சான்றாகும்.

*******

ANU/SM/KV/KRS



(Release ID: 1948731) Visitor Counter : 136


Read this release in: English , Urdu , Hindi , Assamese