மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
குஜராத்தின் நர்மதாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ் கால்நடைகளுக்கான 'ஏ-ஹெல்ப்' திட்டம் மற்றும் கருவுறாமை தடுப்பு முகாமை திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்
Posted On:
14 AUG 2023 5:00PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா குஜராத் மாநிலத்தில் இன்று 'ஏ-ஹெல்ப்' (சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தி விரிவாக்கத்திற்கான அங்கீகாரம் பெற்ற முகவர்) திட்டத்தையும், கருவுறாமை தடுப்பு முகாமையும் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் கீழ் பசுதன் ஜாக்ரதி அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கூடுதல் செயலாளர் (சி.டி.டி) திருமதி வர்ஷா ஜோஷி மற்றும் காமதேனு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என்.எச்.கேலாவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கால்நடைத் துறையின், குறிப்பாக குஜராத்தில், கால்நடைத் துறையின் விரிவான வளர்ச்சியில் கால்நடைகள் மற்றும் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். 'ஏ-ஹெல்ப்' திட்டம் மற்றும் கருவுறாமை தடுப்பு முகாம் ஆகியவை பெண்களுக்கு அதிகாரமளித்தல், கால்நடை உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார நிலப்பரப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கலாம்.
ராஷ்டிரிய கோகுல் மிஷனின் (ஆர்ஜிஎம்) கீழ் நோய் கட்டுப்பாடு, செயற்கை கருவூட்டல், கால்நடை குறியிடல் மற்றும் கால்நடை காப்பீடு ஆகியவற்றில் கணிசமாக பங்களிக்கும் பயிற்சி பெற்ற முகவர்களாக பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை 'ஏ-ஹெல்ப்' திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவித்து, மகளிர் சக்தியின் முன்மாதிரியான ஒருங்கிணைப்பாக இந்த முயற்சி செயல்படுகிறது என்று திரு ரூபாலா வலியுறுத்தினார்.
சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தின் உணர்வைக் கொண்டாடும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் கீழ் இந்த இயக்கம் நடைபெறுகிறது. கால்நடைகளின் ஆரோக்கியம், நோய் மேலாண்மை மற்றும் விலங்குகளின் கருவுறாமை கவலைகளின் முக்கியமான பகுதிகளை நிவர்த்தி செய்யும் அறிவு மற்றும் வளங்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் இந்த பிரச்சாரத்தின் சாராம்சம் உள்ளது.
இதற்காக, மாநில கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மாநில கால்நடை பராமரிப்புத் துறைகளுடன் ஒருங்கிணைந்து, பல்வேறு மாவட்டங்களில் பயிலரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த உள்ளன. இந்த ஈடுபாடுகள் நோய் கட்டுப்பாடு, பொருத்தமான ஊட்டச்சத்து, கால்நடைகளுக்கான சரியான நேரத்தில் மருத்துவ தலையீடுகள் குறித்த முக்கியமான அறிவை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. முக்கியமாக, இந்த மாவட்டங்களில் ஆர்வமுள்ள மாணவர்களும் செயல்முறை பயிற்சி அமர்வுகளில் பங்கேற்று, அறிவியல் கால்நடை மேலாண்மை நுட்பங்கள் குறித்த அவர்களின் புரிதலை மேம்படுத்துவார்கள். இம்முகாமில் குறைந்தபட்சம் 250 விவசாயிகள் மற்றும் உரிமையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களின் கால்நடைகளின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு நுண்ணறிவுகளை வழங்க வேண்டும்.
அத்தியாவசிய ஊட்டச்சத்து , தாது கலவைகள், குடற்புழு நீக்கம் மற்றும் மருந்துகளை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் இந்திய இம்யூனோலாஜிக்கல் லிமிடெட்டின் நிபுணர்களுடனான ஒத்துழைப்பு இந்த முன்முயற்சியின் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது. இந்த முழுமையான அணுகுமுறை விவசாய சமூகத்தை வலுப்படுத்த முயல்கிறது, நாட்டின் விலைமதிப்பற்ற கால்நடைகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை வளர்ப்பதற்கு அறிவு மற்றும் உறுதியான வளங்கள் இரண்டையும் வழங்குகிறது.
இந்த முயற்சிகள் கிராமப்புற சமூகங்களில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்களின் சமூக-பொருளாதார வாய்ப்புகளை உயர்த்தும் என்றும், உலகளாவிய கால்நடை சந்தையில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறிவு, வளங்கள் மற்றும் உத்திபூர்வ திட்டமிடல் ஆகியவற்றின் சங்கமம் ஆரோக்கியமான, மிகவும் வளமான தேசத்தை நோக்கிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
ANU/SM/ PKV/KRS
***
(Release ID: 1948723)
Visitor Counter : 136