பிரதமர் அலுவலகம்
பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நினைவுகூர்ந்தார்
Posted On:
14 AUG 2023 10:06AM by PIB Chennai
நாடு முழுவதும் இன்று ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்’ அனுசரிக்கப்படும் நிலையில், நாட்டின் பிரிவினையில் உயிரிழந்தவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் என்பது நாட்டின் பிரிவினைக்காக உயிர் தியாகம் செய்த இந்திய மக்களை பயபக்தியுடன் நினைவுகூரும் ஒரு சந்தர்ப்பமாகும். இதனுடன், இடப்பெயர்வின் சுமைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களின் துன்பங்களையும், போராட்டத்தையும் இந்த நாள் நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் எனது வணக்கங்கள்.”
***
AP/BR/AG
(Release ID: 1948443)
Visitor Counter : 165
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada