கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
புதுதில்லியில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகளாவிய கடல் சார் உச்சி மாநாடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் எடுத்துரைத்தார்
Posted On:
12 AUG 2023 3:45PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இல்லத்தில் இன்று (11-08-2-23) சர்வதேச பிரமுகர்களின் கூட்டம் நடைபெற்றது. 21 நாடுகளின் தூதர்கள், உயர் அதிகாரிகள், வர்த்தகத் துறை அதிகாரிகள் உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 2023 அக்டோபரில் புதுதில்லியில் நடைபெறவுள்ள உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2023 தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங், வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய திரு சர்பானந்த சோனோவால் கடல்சார் துறையில் இந்தியாவுக்கு மிகச் சிறந்த திறன் உள்ளது என்று கூறினார். உலகமயமாக்கலில், கடல்சார் துறை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகள் உலகளாவிய அளவில் வர்த்தகத்திற்கு உகந்ததாக தற்போது மாற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். நமது பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட முக்கிய திட்டமான "சாகர்மாலா" இந்தியத் துறைமுகங்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதாக திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
2023 அக்டோபர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உலகளாவிய கடல்சார் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.maritimeindiasummit.com என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
**************
ANU/SM/PLM/DL
(Release ID: 1948190)
Visitor Counter : 195