உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான விருதுகளில் தங்கப் பதக்கம் வென்றதற்காக தேசிய தானியங்கி கைரேகை அடையாள செயல்முறையின் (என்ஏஎஃப்ஐஎஸ்) குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 12 AUG 2023 4:38PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் (டிஏஆர்பிஜி) டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு செயல்முறை மறுசீரமைப்பு வகை -1-ன் கீழ் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கீழ் செயல்படும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள செயல்முறை தொடர்பான (என்ஏஎஃப்ஐஎஸ்) குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர்  திரு. அமித்ஷா பாராட்டுத்  தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பான இந்தியா என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதில் தேசிய தானியங்கி கைரேகை அடையாள செயல்முறை தொடர்பான குழுவினர், அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அதற்கு கிடைத்த அங்கீகாரமே இந்த விருது என்றும் திரு அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் வழிகாட்டுதலில், உள்துறை அமைச்சகம் அனைத்து மாவட்டங்கள், காவல் ஆணையரகங்கள், போன்றவற்றுக்கு என்ஏஎஃப்ஐஎஸ் எனப்படும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள செயல்முறை சாதனங்கள் வழங்கப்படட்டுள்ளன. குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கைரேகை அறிதல் முறையில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையின் மூலம், வெளிமாநில குற்றவாளிகளைக் கண்டறியும் பணி மிகவும் எளிதாகவும், துல்லியமாகவும், செயல்திறனுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

குற்றவாளிகளின் கைரேகைகளின் மைய தரவுத்தளத்தை தேசிய தானியங்கி கைரேகை அடையாள செயல்முறை உருவாக்கியுள்ளது.  இதனை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய முகமைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இது குற்றவாளிகளைக் கண்டறிதல் மற்றும் விசாரணை செயல்முறையின் செயல்திறனில் மிக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

**************  

ANU/AP/PLM/DL


(Release ID: 1948153) Visitor Counter : 141


Read this release in: Kannada , English , Urdu , Marathi