பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக ஜி 20 நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
11 AUG 2023 3:30PM by PIB Chennai
ஜி 20 ஊழல் எதிர்ப்பு பணிக்குழுவின் (ஏ.சி.டபிள்யூ.ஜி) கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் பணிக்குழுவின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நாளை (12.08.2023) கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தில்லியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை விரைவாக நாடு கடத்தி விசாரிப்பதை உறுதி செய்வதற்காக ஜி 20 நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது என்றார்.
அர்ஜென்டினாவின் பியூனோஸில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒன்பது அம்ச திட்டத்தை முன்வைத்ததை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.
ஏற்கனவே, உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், போன்ற பகுதிகளில் நடைபெற்ற ஜி 20 ஊழல் எதிர்ப்புக் கூட்டங்கள் இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார். ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்றும், இதற்கான புகழ் பிரதமர் திரு நரேந்திர மோடியையே சாரும் என்றும் அமைச்சர் கூறினார்.
2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி, திரு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்து தொடர்ந்து ஏற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
***
AD/ANU/PLM/RS/PKG
(Release ID: 1947938)