பாதுகாப்பு அமைச்சகம்
சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஆய்வு
प्रविष्टि तिथि:
11 AUG 2023 4:25PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் தேசிய மாணவர் படையினரிடையே (என்.சி.சி) பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இன்று (11.08.2023) உரையாற்றினார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்த என்சிசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
என்சிசி மாணவர்களிடையே உரையாற்றிய திரு அஜய் பட், நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்கள் எப்போதும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக இருப்பதாகக் கூறினார். என்.சி.சி மாணவர்கள் எதிர்கால வீரர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாணவர்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் காப்பதற்கான வலுவான தூணாக இருப்பதாக அவர் கூறினார். இப்போதைய என்சிசி மாணவர்கள், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதிலும் தேசத்தை தன்னிறைவு மற்றும் வளர்ச்சியடைந்ததாக மாற்றுவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று அவர் கூறினார்.
இளைஞர்களுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள முன் முயற்சிகளைப் பட்டியலிட்ட பாதுகாப்புத் துறை இணையமைச்சர் இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறினார். டிஜிட்டல் புரட்சி, ஸ்டார்ட் அப் புரட்சி என அனைத்திலும் இளைஞர்கள் மிகப்பெரிய பலனை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் இளம் தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்று அவர் கூறினார்.
என்.சி.சி மாணவர்களின் ஆர்வத்தையும் மன உறுதியையும் பாராட்டிய இணை அமைச்சர் திரு அஜய் பட் அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார் .
***
AP/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1947931)
आगंतुक पटल : 141