ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், நில ஆவணங்களை கணினி மயமாக்குதல் மற்றும் நில வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகளை நில வளத் துறை மேற்கொண்டு வருகிறது

Posted On: 11 AUG 2023 11:56AM by PIB Chennai

அண்மைக்காலமாக நிலவளத் துறை மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நில ஆவணங்களை கணினி மயமாக்குதல் மற்றும் நில வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, உரிமைப் பதிவேடுகளைக் கணினிமயமாக்குதல், பதிவு அலுவலகங்களைக் கணினிமயமாக்குதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, 2023 ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலவரப்படி தேசிய அளவிலான சாதனை 94% ஆகும்.

இதேபோல், நாட்டில் வரைபடங்களின் டிஜிட்டல்மயமாக்கல் 76% ஆகும். இதுதவிர, அனைத்து நில தொகுப்புகளுக்கும் தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண்ணினை நிலவளத் துறை (டிஓஎல்ஆர்) ஒதுக்குகிறது; மேலும் ஓராண்டு காலத்திற்குள், ஏறத்தாழ 9 கோடி நில தொகுப்புகளுக்கு இத்தகைய ஆதார்  எண் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு, ஆவணங்களைப் பதிவு செய்வது, எழுத்துமுறையில் இருந்தது, ஆனால் இப்போது மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இத்துறை ஒரு ஊடகத் திட்டத்தை வகுத்துள்ளது, இது 2023 ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில் வெளிப்புற ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் கூறுகள் அடங்கும்.

 

***

AD/ANU/AP/SMB/AG/KPG

 



(Release ID: 1947740) Visitor Counter : 115


Read this release in: Urdu , English , Hindi , Telugu