சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

மகளிருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம்

Posted On: 10 AUG 2023 3:22PM by PIB Chennai

சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு சமுதாயத்தினருக்கு 'சீகோ அவுர் கமாவோ', 'யு.எஸ்.டி.டி.ஏ.டி' மற்றும் 'யி மன்சில்' போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் 30% இடங்கள் பெண் பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவை தவிர, சிறுபான்மைப் பெண்களின் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக பல்வேறு தலைப்புகளில் தலைமைத்துவப் பயிற்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் 'நயி ரோஷினி' என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் 2020-2021 ஆம் ஆண்டில் நிறுவனங்களால் கடைசியாக மதிப்பீடு செய்யப்பட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன:

திட்டம்

மதிப்பீட்டு நிறுவனம்

ஆண்டு

சீகோ அவுர் கமாவோ

மேலான்மை வளர்ச்சி நிறுவனம், குர்கான்

2020

USTTAD

மேலான்மை வளர்ச்சி நிறுவனம், குர்கான்

2021

யி மன்சில்

மோட் மெக்டொனால்ட்

2021

யி ரோஷினி

சந்தை ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு மையம்

2021

 

கடந்த மூன்று ஆண்டுகளில் மற்றும் நடப்பாண்டில், 27,217 பெண் பயனாளிகள் உட்பட, 36,492 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****



(Release ID: 1947542) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Punjabi